அவன் இவனுக்குப் பின் மீண்டும் இணையும் விஷால் - ஆர்யா!

By Shankar

பாலாவின் அவன் இவன் படத்துக்குப் பிறகு, மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் விஷாலும் ஆர்யாவும்.

நடிப்பு, தயாரிப்பு, விநியோகம், ஆடியோ கம்பெனி என சினிமாவின் பல துறைகளிலும் கால் பதித்து, வெற்றிகரமாக வலம் வர ஆரம்பித்துள்ளார் விஷால்.

மூன்று படங்கள்

மூன்று படங்கள்

இப்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார். ஹரி இயக்கத்தில் ‘பூஜை' படத்தில் நடித்து வரும் விஷால், சுந்தர்.சி இயக்கும் ‘ஆம்பள' படத்திலும், சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார்.

வி மியூசிக்

வி மியூசிக்

விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் சொந்தமாக வி மியூசிக் என்ற ஆடியோ நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

சுசீந்திரன்

சுசீந்திரன்

இந்நிலையில், பாண்டிய நாடு படத்துக்குப் பிறகு மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படத்தில் தனது நெருங்கிய நண்பரான ஆர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்.

அவன் இவனுக்குப் பிறகு

அவன் இவனுக்குப் பிறகு

பாலா இயக்கத்தில் அவன்-இவன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். சுசீந்திரன் படத்தில் விஷால்தான் நாயகன் என்றாலும், ஆர்யா ஒரு சிறப்புத் தோற்றத்தில் வரவிருக்கிறாராம். விஷாலின் படங்களை தொடர்ந்து விநியோகித்து வரும் வேந்தர் மூவிஸ்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X