எனிமி படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் வெளியீடு... எதிர்பார்ப்பை தூண்டும் காட்சிகள்!
சென்னை : விஷால், ஆர்யா இணைந்து மிரட்டும் எனிமி படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.
தீபாவளியையொட்டி நவம்பர் 4ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.
படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை மிரட்டலாக காணப்படுகிறது.

எனிமி படம்
கோலிவுட்டில் சிறந்த நண்பர்களாக இருக்கும் விஷால் மற்றும் ஆர்யா தற்போது எனிமியாகியுள்ளனர். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எனிமி படத்தில் இவர்கள் இணைந்துள்ளனர். இந்தப் படம் தீபாவளி ரிலீசாக வரும் நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ளது.

வெளியீட்டில் சிக்கல்
இந்தப் பட வெளியீட்டில் சிக்கல் உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். பட வெளியீட்டிற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆயினும் பட வெளியீட்டிற்கான பிரமோஷன்கள் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ட்ரெயிலர் வெளியீடு
படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்த நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. ஆர்யா மற்றும் விஷால் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது ட்ரெயிலர் மூலம் தெரிகிறது. ட்ரெயிலரை இயக்குநர் ஆனந்த் சங்கர் வெளியிட்டுள்ளார்.

ஆர்யாவிற்கு முக்கியத்துவம்
பரபரப்பான காட்சிகளை இந்த ட்ரெயிலரில் படக்குழுவினர் இணைத்துள்ளனர். குழந்தை பருவத்தில் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன. தொடர்ந்து இவர்கள் எவ்வாறு விலகுகின்றனர் என்பது படத்தை பார்த்தால் மட்டுமே தெரியவரும். குறிப்பாக ஆர்யாவிற்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் அமைந்துள்ளதாக ட்ரெயிலரில் தெரிகிறது.

ஆனந்த் சங்கர் இயக்கம்
படத்தில் ஹீரோவாக விஷாலும் வில்லனாக ஆர்யாவும் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரிமா நம்பி, இருமுகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் மிருணாளினி மற்றும் மம்தா மோகன்தாஸ் நாயகிகளாக நடித்துள்ளனர்.

யூஏ சான்றிதழ்
படத்தின் தணிக்கையும் செய்யப்பட்டு படத்திற்கு யூஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தீபாவளியையொட்டி இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், அண்ணாத்த படத்துடன் மோதும் ஒரே படமாக எனிமி தற்போது உள்ளது. தீபாவளி ரேசிலிருந்து மாநாடு படம் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











