விஷால் பிறந்தநாள் ஸ்பெஷல்...சிடிபி வெளியிட்ட பிரபலங்கள்
சென்னை : நடிகர் விஷால் இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் விஷால், டைரக்டர் ஆகும் ஆசையுடன் சினிமாவிற்கு வந்தவர். டைரக்டர் அர்ஜுன் சர்ஜாவிடம் அசிஸ்டென்டாக வாழ்க்கையை துவக்கினார் விஷால். செல்லமே படத்தின் மூலம் ஹீரோ ஆனவர்.
முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது படமான சண்டைக்கோழி பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. தொடர்ந்து இவர் நடித்த திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

பல அவதாரங்களில் கலக்கல்
ஹீரோ, மல்டிஹீரோ என பலவகையான படங்களில் நடித்தார். பிறகு விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, பல படங்களை தயாரித்து வருகிறார்.நடிகர் சங்க தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பொது செயலாளராக இருந்து வருகிறார்.பொது செயலாளர் ஆவதற்கு முன்பே திருட்டு விசிடியை ஒழிக்க தீவிரமாக களமிறங்கியவர்.

மார்க் ஆன்டனி ஃபர்ஸ்ட்லுக்
விஷால் தற்போது லத்தி, துப்பறிவாளன் 2, மார்க் ஆன்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இவை மூன்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்க் ஆன்டனி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

காமன் டிபி வெளியீடு
இந்நிலையில் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி உருவாக்கப்பட்டுள்ளது. இதை நடிகைகள் சனம் ஷெட்டி, ரெஜினா, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். சேரில் கால் மேல் கால் போட்ட படி விஷால் கெத்தாக அமர்ந்திருக்க, அவர் முன் பல படங்களின் சிடிக்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.

செம கெத்தா இருக்கே
அப்துல் கலாமின் உருவ சிலை, பேக்கிரவுண்டில் 'வி' என்ற எழுத்துடன் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காமன் டிபி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை அதிகமானவர்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











