”பரதேசி”.. மேடையிலேயே மார்க் ஆண்டனி இயக்குநரை அப்படி பேசிய விஷால்.. என்ன மேட்டர் தெரியுமா?

சென்னை: த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் வாரம் வெளியாகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷால் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது என்றும் பீரியட் போர்ஷனுக்காக ரொம்பவே மெனக்கெட்டு இருக்கோம் என்றார்.

Vishal calls Mark Antony Director Aadhik Ravichandran as Paradesi on stage

சட்டென இயக்குநரை பார்த்து, "இந்த பரதேசி ஆதிக் ரவிச்சந்திரன்" என விஷால் மேடையிலேயே திடீரென பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த முறை மிஸ் ஆகாது: சமீப காலமாக பல தோல்வி படங்களை கொடுத்து வரும் நடிகர்களின் நம்பிக்கை வார்த்தையாக இந்த முறை மிஸ் ஆகாது என்கிற வார்த்தை அடிவாங்கி வருகிறது.

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான அரை டஜன் படங்கள் அட்டு ஃபிளாப் ஆன நிலையில், மார்க் ஆண்டனி படம் நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நான் நம்புகிறேன் என சமீபத்தில் நடந்த மார்க் ஆண்டனி பட விழாவில் விஷால் பேசியுள்ளார்.

மார்க் ஆண்டனி இயக்குநர்: த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை ஜிவி பிரகாஷ், கயல் ஆனந்தியை வைத்து இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் மார்க் ஆண்டனி படத்தை இயக்கி உள்ளார். சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என தரமான சம்பவத்தை செய்த அதே ஆதிக் ரவிச்சந்திரன் தான் சமீபத்தில் பிரபுதேவாவை வித விதமான கெட்டப்புகளில் நடிக்க வைத்து பஹீரா படத்தை இயக்கி பகீர் கிளப்பினார்.

Vishal calls Mark Antony Director Aadhik Ravichandran as Paradesi on stage

இந்நிலையில், விஷால், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வித்தியாசமான டைம் மெஷின் கான்செப்ட்டில் ஒரு கேங்ஸ்டர் படமாக மார்க் ஆண்டனி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.

பரதேசின்னு சொன்ன விஷால்: அந்த விழாவில் விஷால் பேசும் போது, "இந்த பரதேசி ஆதிக் ரவிச்சந்திரன் யாருன்னு மார்க் ஆண்டனி காட்டும்" என உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஷால், ஆதிக் என் தம்பி போல, அவனுக்குள்ள ஏகப்பட்ட திறமை இருக்கு என அப்படியே தனது இயக்குநரை பாராட்டினார்.

ஆனால், மேடை நாகரீகமே தெரியாமல் நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநரை எப்படி விழா மேடையிலேயே பரதேசின்னு பேசலாம் என நெட்டிசன்கள் விஷாலின் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X