»   »  மாநகராட்சிப் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடிய விஷால்!

மாநகராட்சிப் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடிய விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்று குழந்தைகள் தினத்தை சென்னை மாநகராட்சிப் பள்ளியில் கொண்டாடினார் நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால்.

இந்த விழாவில், தனது தேவி அறக்கட்டளை சார்பில், கோடம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு படிப்பதற்க்கு தேவையான நோட்டுப் புத்தகம், படிப்பு உபகரணங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார் விஷால்.

Vishal celebrates Children day with corporation school students

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகளையும் நட்டார்.

அடுத்து வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ள சாலமன் ஆதரவற்ற இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பதற்கு தேவையான படிப்பு உபகரணங்கள், போர்வைகள் மற்றும் உணவு வழங்கினார்.

விஷாலின் தேவி அறக்கட்டளயின் சார்பாக ஹரி மற்றும் சௌந்தர் ராஜன் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

English summary
Vishal has celebrated Children day with corporation school students on Monday
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos