பிரியா பவானி சங்கருடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்.. கூட யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!
சென்னை: நடிகர் விஷால் தனது 46வது பிறந்தநாளை நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஜாடிக்கேத்த மூடி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தே சினிமாவில் அறிமுகமான விஷால், 2004ம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து சண்டைக்கோழி, திமிரு என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த விஷால் இயக்குநர் ஹரி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
புரட்சி தளபதி பர்த்டே: தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டிக்கு 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி மகனாக பிறந்தவர் விஷால். செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஷால் தொடர்ந்து சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தி புரட்சி தளபதியாக கெத்துக் காட்டி வருகிறார்.
நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட விஷால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கிக் கொண்டு தன்னை இயக்குநராகவும் விரைவில் வெளிப்படுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா பவானி சங்கருடன் பிறந்தநாள் கொண்டாட்டம்: இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியா பவானி சங்கர் தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், காரைக்குடியில் நடைபெற்று வரும் அந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள விஷால் இயக்குநர் ஹரி, பிரியா பவானி சங்கர் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்.
மார்க் ஆண்டனி மீது நம்பிக்கை: நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் காலை முதலே பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செப்டம்பர் 15ம் தேதி விஷால், ரிது வர்மா, எஸ்.ஜே. சூர்யா மற்றும் செல்வராகவன் நடிப்பில் உருவாகி உள்ள மார்க் ஆண்டனி படத்தை ரொம்பவே நம்பியிருக்கிறார் விஷால். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த தாமிரபரணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், மீண்டுமொரு பிளாக்பஸ்டர் படம் விஷாலுக்கு கிடைக்கும் என ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











