2021 மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக அமைய வாழ்த்து…விஷால் சந்திரசேகர் !
சென்னை: தன்னுடைய தனித்திறமையால் அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்து வரும் இளம் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்...
கொரோனா காலம் வெகுவாக பாதித்த துறைகளில் சினிமாவும் ஒன்று, ஆனால் திறமை வெளிக்கொணர ஊரடங்கு ஒரு தடை அல்ல என நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்
திரையரங்குகள் திறக்காததால் ஆன்லைன் தளங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு ஆன்லைனில் வெளிவந்த தமிழ் வெப் சீரிஸில் , சாரு கே சேகர் இயக்கத்தில் ஜெய் , வாணிபோஜன் நடிப்பில் வெளியான "ட்ரிப்பிள்ஸ்" இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நகைச்சுவை தொடராக
மறைந்த நடிகர் "கிரேஸி மோகனுக்கு" மரியாதை செலுத்தும் விதமாக இம்மாதம் இந்த வெப் சீரிஸ் வெளியானது, முழு நீள நகைச்சுவை தொடராக எடுக்கப்பட்டன. இதற்கு சிறந்த முறையில் இசையமைத்து பாராட்டை பெற்றார். இசை மீது அதிகம் காதல் கொண்ட விஷால் பல புதிய யுக்திகளை பயன்படுத்த துவங்கி உள்ளார் .

பிரியா பவானி சங்கர்
"பெல்லிச்சூப்புலு" திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ஓ மணப் பெண்ணே திரைப்படம், கார்திக் சுந்தர் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வருகிறது இதற்கும் விஷால் சந்திரசேகர் இசையமைக்க உள்ளார்.

நேர்த்தி காட்டுவதிலும்
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ராஷ்மிகா நடிக்கும் தெலுங்கு படத்திலும், நாக ஷௌரியா, ரீத்து வர்மா ஆகியோர் நடிக்கும் தெலுங்கு படங்கள் என இரு தெலுங்கு படங்களுக்கு இசை அமைக்கிறார். கை நிறைய படங்கள் இருந்தாலும் இசை அமைப்பதில் நேர்த்தி காட்டுவதிலும் கவனம் குறையாமல் பார்த்து அது மெனக்கெடுவதில் கெட்டிக்காரராக விளங்குகிறார் விஷால்.

வாழ்த்துவது போல்
2020 பல விதமான கஷ்டங்களை சந்தித்து வந்த சினிமா உலகம் மற்றும் சினிமா தொழில் சார்ந்த அணைத்து துறையினருக்கும் 2021 நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என்று தொடர்ந்து புன்சிரிப்புடன் தனது நலம் விரும்பிகளுக்கும் , ஊடங்கங்களுக்கும் , வாழ்த்து சொல்லி வருகிறார். விஷால் வாழ்த்துவது போல் 2021 நல்ல ஆண்டாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரது ஆசையும் கூட.


Click it and Unblock the Notifications











