twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்சார் போர்டு ஆபிஸ் முன்னாடி போராடுங்க.. தியேட்டர் அதுக்கான இடம் இல்லை - விஷால் பேச்சு!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    இரும்புத்திரை வெற்றி கூட்டத்தில் பல உண்மைகளை தெறிக்க விட்ட விஷால் - வீடியோ

    சென்னை : விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'இரும்புத்திரை' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியாகி ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில் 'இரும்புத்திரை' படத்தின் வசூல் ரூ. 15 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    கடந்த வீக்கெண்டிலேயே கிட்டத்தட்ட 9 கோடி வரை வசூல் செய்திருந்தது இந்தப் படம். இந்நிலையில், இப்படத்தின் சக்ஸஸ் மீட் இன்று நடைபெற்றது. விஷால், மித்ரன், அர்ஜூன், ரோபோ ஷங்கர், காளி வெங்கட் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு நன்றி தெரிவித்துப் பேசினர்.

    Vishal comment on protesters

    இந்த வெற்றி விழாவில் பேசிய விஷால், படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினரை கடுமையாகச் சாடினார். "படத்திற்கு எதிராக போராட்டம் செய்பவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி வாங்கி போராடுங்கள். இல்லையெனில் சென்சார் போர்டு ஆபிஸுக்கு முன்பு போராட்டம் செய்யுங்கள்.

    சினிமா தியேட்டர் நீங்கள் போராடுவதற்கான இடம் அல்ல. ஒருமுறை சென்சார் சான்றிதழ் வாங்கிவிட்டால் அந்தப் படம் மக்களைச் சென்று சேர்வதை யாரும் தடுக்க முடியாது" என்று கூறினார்.

    சமந்தாவைப் பற்றிப் பேசிய விஷால், "திருமணமான பிறகு ஹீரோயின்கள் தொடர்ந்து நடிக்க வரமாட்டார்கள் எனும் நம்பிக்கையை சமந்தா உடைத்துள்ளார். அவருக்காக பெருமைப்படுகிறேன். உண்மையிலேயே சமந்தா ப்ரொஃபன்ஷல் நடிகை" எனக் கூறினார்.

    'இரும்புத்திரை' படத்தில் தைரியமாக ஆதார் கார்டு, விஜய் மல்லையா பற்றி வசனங்களை வைத்ததற்காக விஷாலின் தைரியத்தை பலரும் பாராட்டிப் பேசினர்.

    English summary
    Vishal's 'Irumbuthirai' is getting good response from the fans. The film's success meet is held today. Vishal said, "Get permission and protest at Valluvar Kottam or go protest at the censor board office. Cinema theater is not a place to come and protest."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X