'நடிகையர் திலகம்' கீர்த்தி சுரேஷுக்கு இப்படியும் ஒரு மறுபக்கமா!
நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் ஆவார் என விஷால் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு நாள் நிச்சயம் இயக்குனர் ஆவார் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சண்டக்கோழி 2 படத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளனர். லிங்குசாமி இயக்கியுள்ள இப்படம் அடுத்த மாதம் 18ம் தேதி ஆயுத பூஜை விழாவையொட்டி ரிலீசாகிறது. பந்தயக்கோழி 2 என்ற பெயரில் தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் சண்டக்கோழி 2 படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கீர்த்தி சுரேஷ் குறித்து நடிகர் விஷால் கூறுகையில், "கீர்த்தி நடித்த நடிகையர் திலகம் பார்த்துவிட்டு அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறினேன். அவருடன் நடித்தது எனக்கு சந்தோஷமாக உள்ளது.

இயக்குனர் கீர்த்தி
கீர்த்தி சுரேஷ் ஒரு எழுத்தாளர். நான் படம் இயக்குவேனோ இல்லையோ கட்டாயம் கீர்த்தி சுரேஷ் இயக்குநராக வலம் வருவார்", என அவர் தெரிவித்தார்.

கீர்த்தி சுரேஷ் பேச்சு
விஷாலை தொடர்ந்து பேசிய கீர்த்தி சுரேஷ்," லிங்குசாமி சாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.இந்த கதை கேட்கும் போது ரொம்ப டென்ஷனாக இருந்தேன்.

பயமாக இருந்தது...
மீராஜாஸ்மீன் மேடம் பற்றி எல்லாருக்கும் தெரியும் சண்டைகோழி முதல் பாகத்தில் எப்படி நடித்திருப்பார் என்று. அதை நான் எப்படி பண்ண போகிறேன் என்ற பயம் இருந்தது. அதற்கு நிகராகவாவது நடிக்க வேண்டும் என தோன்றியது.

ரிலாக்ஸான படப்பிடிப்பு
மகாநதி படபிடிப்பின் போதும் இந்த படம் தான் எனக்கு பெரிய ரிலாக்ஸாக இருந்தது. விஷால்,லிங்குசாமி அவர்களுடன் படபிடிப்பில் கலந்துகொண்டது ரொம்ப மகிழ்ச்சியை தந்தது. மகாநதிக்கு பின் நான் விருப்பி நடித்த படம் சண்டைகோழி-2 தான். இந்த படத்தின் மூலம் விஷால் நண்பராகிவிட்டார்" என கீர்த்தி சுரேஷ் கூறினார்.


Click it and Unblock the Notifications











