சபாஷ் சரியான போட்டி.. விஜய்சேதுபதியுடன் மோதும் விஷால்!

சுந்தர். சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரைப்படம் வரும் நவம்பர் 15ம் தேதி ரிலீசாகிறது என்ற அறிவிப்பை நடிகர் விஷால் தற்போது அறிவித்துள்ளார்.

சென்னை: கத்தி சண்டை படத்திற்கு பிறகு விஷால், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் படம் நவம்பர் 15ம் தேதி வெளியாகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இயக்குநர் சுந்தர். சி இதற்கு முன் இயக்கிய படங்களை விட, ஆக்‌ஷன் படம் வேறு ஒரு அனுபவத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்கேப்

எஸ்கேப்

விஜயா புரொடக்‌ஷன் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படம், தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் மற்றும் கைதி படங்களுடன் போட்டி ரிலீசாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர், கடைசி நேரத்தில் தேதி குறிப்பிடாமல் தீபாவளி ரேசில் இருந்து எஸ்கேப் ஆனது.

மோதல்

தீபாவளி ரேசில் எஸ்கேப் ஆன விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படம், நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர். சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் படமும் அதே நாளில் வெளியாகிறது என்ற அறிவிப்பை தற்போது விஷால் அறிவித்துள்ளதால், விஜய்சேதுபதி - விஷால் மோதல் உறுதியாகியுள்ளது.

ஒதுங்கிய மேனன்

ஒதுங்கிய மேனன்

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படமும் வரும் நவம்பர் 15ம் தேதி வெளியாகும். மும்முனை போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கெளதம் மேனன் பெரிய படங்களுடன் போட்டியின்றி, சோலோ ரிலீசாக எனை நோக்கி பாயும் தோட்டாவை இம்மாத இறுதியில் நவம்பர் 29ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்.

எதிர்பார்ப்பு எப்படி?

எதிர்பார்ப்பு எப்படி?

சுந்தர். சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, ராம்கி, கபிர் சிங் துஹான், யோகிபாபு என பலர் நடித்திருக்கும் படம் ஆக்‌ஷன். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் துருக்கி மற்றும் அஸர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளன. ஹாலிவுட் தரத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பது, படத்தின் டீசர் மற்றும் டிரைலரிலேயே தெரிகிறது. மேலும், டீசர் மற்றும் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பால், படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X