தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் விஷால்

By Shankar

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் இப்போது நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராக உள்ளார்.

Vishal to contest Producer Council president post

அவர் இந்தப் பதவிக்கு வந்த பிறகு, ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சித்துப் பேசினார். அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றுவோம் என்றார்.

இதைக் கண்டித்த தயாரிப்பாளர் சங்கம், அவரை அடிப்படை உறுப்பினர் பதவியை தற்காலிக நீக்கம் செய்தது.

இதை எதிர்த்து நீதிமன்றம் போனார் விஷால். இந்த தற்காலிக நீக்கத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டதால், விஷாலை மீண்டும் சேர்த்துக் கொண்டது தயாரிப்பாளர் சங்கம்.

இதுவரை, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி இருந்தது. இப்போது அவர் வாக்களிக்க மட்டுமல்ல, தேர்தலில் நிற்கவும் தடை இல்லை.

வரும் மார்ச் 5-ம் தேதி நடக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X