கல்யாணம் உண்மைதான்.. ஆனா, விஷால் கட்டிக்கப் போற பொண்ணு ‘அவங்க’ இல்லையாம்!
விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் என பரவி வரும் புகைப்படம் தவறானது என தெரிய வந்துள்ளது.
Recommended Video

சென்னை: விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் என ஊடகங்களில் வைரலான பெண் புகைப்படம் தவறானது என விஷால் தரப்பு விளக்கமளித்துள்ளது.
நடிகர் விஷால் தனது நீண்டகாலத் தோழி வரலட்சுமியைத் தான் காதலிக்கிறார் என நீண்டகாலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அதனை அவர்கள் இருவருமே மறுத்திருந்தனர்.
இந்நிலையில், ஆந்திராப் பெண் ஒருவரை விஷால் மணக்க இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் விஷாலின் அப்பா தெரிவித்தார். ஆனால் அப்பெண் யார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

காதல் திருமணம்:
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த விஷால், ‘ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்பவரைக் காதலிப்பதாகவும், இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும்' தெரிவித்திருந்தார்.

தவறான புகைப்படம்:
அதனைத் தொடர்ந்து இந்தச் செய்தியுடன் ஒரு பெண்ணின் புகைப்படமும் ஊடகங்களில் வெளியானது. இவர் தான் விஷாலின் வருங்கால மனைவி என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தகவலை விஷால் டிவிட்டரில் மறுத்திருந்தார்.

விளக்கம்:
ஆனாலும், தொடர்ந்து அந்தப் புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விஷால் தரப்பு விளக்கமளித்துள்ளது. அதில், "நடிகர் விஷாலின் திருமணம் பற்றி இந்த படத்திலிருக்கும் பெண்மணியின் புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளி வந்து பரவி கொண்டிருக்கிறது.

வேண்டுகோள்:
ஆனால், இந்தச் செய்தி முற்றிலும் தவறானதும் உண்மைக்கு புறம்பானதுமாகும். முறைப்படி அறிவிப்பு வெளியாகும். மேலும் திருமணம் பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின் செய்திகளை வெளியிடுமாறும் வேண்டுகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











