கிராமத்து மாணவர்களுக்கு 35 மிதி வண்டிகள் வாங்கித் தந்த விஷால்!
சுற்றிலும் ஏகத்துக்கும் சர்ச்சைகள், தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதல், மீடியாவில் ஒரே மீம்ஸ் இம்சைகள்... இருந்தாலும் தனது நற்பணிகளை நிறுத்தவில்லை விஷால்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கிராமங்களில் இருந்து பல கிலோமீட்டர் தூரம் நடந்து வருவதாகவும், அவர்களுக்கு உதவி செய்யுமாறும் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை விசாரித்து உறுதிப்படுத்திய நடிகர் விஷால், உடனே தனது தேவி அறக்கட்டளையின் மூலம் அந்த மாணவர்கள் பள்ளிக்கு கஷ்டமின்றி வர,
35 புத்தம் புதிய இரு சக்கர மிதிவண்டிகளை வழங்கினார்.
புதிய சைக்கிள்கள் கிடைத்த மகிழ்ச்சியில், விஷாலுக்கு நன்றி கூறினர் மாணவர்கள்.
Comments


Click it and Unblock the Notifications