»   »  நடிகர் விஷால் விவசாயிகளுக்கு ரூ 2 லட்சம் நிதி உதவி!

நடிகர் விஷால் விவசாயிகளுக்கு ரூ 2 லட்சம் நிதி உதவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை ரூ 2 லட்சத்தை ஏழை விவசாயிகளுக்கு உதவ பயன்படுத்துமாறு கூறினார் நடிகர் விஷால்.

ரவுண்ட் டேபிள் இந்தியாவின் 'தமிழகத்தின் பெருமை' விருதுகளை நடிகர் விஷால் துவக்கி வைத்துப் பேசினார்.

Vishal donates his prize money to farmers

விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, "ரவுண்ட் டேபிள் இந்தியா எனக்கு தரவுள்ள 2 லட்சம் ரூபாயை தமிழகத்தில் உள்ள எளிய விவசாயிகள் பயனடையும் வகையில் அவர்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

Vishal donates his prize money to farmers

14 வெவ்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது இந்த விருது. இவ்விருதுக்கு திறமையுள்ள அனைவரும் www.prideoftamilnadu.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணபிக்கலாம்.

வாழ்க்கையில் வெவ்வேறு துறையில் பயணிக்கும் 8 ஜாம்பவான்களை 'தமிழகத்தின் பெருமை' விருதுகளுக்கான நடுவர்களாக அறிவித்துள்ளது ரவுண்ட் டேபிள் இந்தியா.

Vishal donates his prize money to farmers

அந்த நடுவர்கள்: டாக்டர் மரியஜீனா ஜான்சன், லதா ராஜன், சிம்ரன், முகமது ஆசிப் அலி, சந்திர பாரதி, ஹேமா ருக்மணி, சந்தோஷ் பாபு, நிர்மலா லக்ஷ்மணன்.

English summary
Actor Vishal has donated his Prize Money Rs 2 lakh to poor farmers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil