அவன் மாதிரி நண்பன் கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கனும்.. மத கஜ ராஜா சக்சஸ் மீட்டில் விஷால் கண்ணீர்
சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாபெரும் வெற்றிப் படமாக மாறிய படம், மத கஜ ராஜா. கடந்த 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்து, அதன் பின்னர், சில காரணங்களால், படம் ரிலீஸ் ஆகவில்லை. இப்படியான நிலையில் இந்த படம் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. படம் திரையிடப்பட்ட இடங்கள் மட்டும் இல்லாமல், நாளுக்கு நாள் படத்தின் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. படம் இதுவரை ரூபாய் 30 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படியான நிலையில் படத்தின் வெற்றி விழா இன்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படத்தின் இயக்குநர் சுந்தர் சி பேசும்போது, இந்தப் படத்திற்காக அதிகம் சிரமங்களை எதிர்கொண்ட மனிதர்களில் விஷாலும் ஒருவர். ஒருநாள் அவரது டிரைவர் எனக்கு போன் செய்து விஷால் காரிலேயே மயங்கிவிட்டார் எனக் கூறினார். பதறியடித்து ஓடிப்போய் பார்த்தேன். ஆறரை அடி உருவம் காரில் சரிந்து கிடந்தது. அதன் பின்னர் அவரை மீட்டுக் கொண்டுவந்தோம். அவர் எதனால் மயங்கினார் என்பது தனிக்கதை எனப் பேசினார்.

அதேபோல் விஷால் பேசும்போது பல முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் படக்குழு சார்பில் நடத்தப்பட்ட பிரஸ் மீட்டில், விஷால் கலந்து கொண்டார். அப்போது அவரது கைகள் மிகவும் நடுங்கியது. மேலும், உடல்நலக்குறைவோடு இருந்தார். விஷாலின் இந்த நிலைக்கு காரணம் என பல விஷயங்கள் சொல்லப்பட்டது. இவை அனைத்திற்கும் விஷால் பதில் அளிக்கும் வகையில் பேசினார்.

ஆர்யா: அவர் பேசும்போது, " ஆர்யா போன்ற நண்பன் எனக்கு கிடைக்க நான் என்ன செய்தேன் எனத் தெரியவில்லை. எனக்கு கண்ணீர்தான் வருகின்றது. நான் ஏதோ ஒரு புண்ணியம் செய்துள்ளேன். வரலஷ்மியை நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது. அதேபோல் இத்தனை ஆண்டுகள் நட்பில் வரலஷ்மியைப் பார்த்து நான் கண்ணீர் விட்டது என்றால், அது அனுமன் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் சண்டையைப் பார்த்துதான். அப்படி இருக்கும்போது. சினிமா வாழ்க்கையிலும் சரி, அவரது சொந்த வாழ்க்கையிலும் சரி, வரலஷ்மியை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன்.

விஜய் ஆண்டனி: நானும் விஜய் ஆண்டனியும் எங்களது கல்லூரி காலங்களில் இருந்தே ஒன்றாக உள்ளோம். விஜய் ஆண்டனி மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர். அவரிடம் ஒரே ஒரு கீ போர்ட் இருந்த காலத்தில் இருந்து எனக்கு அவரைத் தெரியும். கல்லூரியில் நாங்கள் இணைந்து, கச்சேரி நடத்தியுள்ளோம். அதன் பின்னர் இந்தப் படத்திற்காகத்தான் இணைந்து பணியாற்றினோம். நாளை விஜய் ஆண்டனியின் காண்செர்ட்டில் நான் பாடுகின்றேன்.

நரம்புத் தளர்ச்சி: எனது உடல் நடுக்கம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்தது. நான் போதைக்கு அடிமையாகிவிட்டேன், நரம்புத் தளர்ச்சி என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் இதன் மூலம் என்மீது எவ்வளவு அன்பு உள்ளது என்பதை நான் தெரிந்து கொண்டேன். இவ்வளவு அன்பினை நான் சம்பாதித்துள்ளேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தின் வெற்றி எங்களுக்கு, நம்பிக்கை கொடுத்துள்ளது. ஆம்பள படத்தை ரீ ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்துள்ளோம்" என பேசினார்.



Click it and Unblock the Notifications











