மைக் ஆடல.. கை நடுங்கல.. சாகுற வரைக்கும் மறக்கவே மாட்டேன்.. மத கஜ ராஜா ப்ரீமியரில் விஷால் உருக்கம்!

சென்னை: மத கஜ ராஜா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை கூட நடிகர் விஷால் தவிர்த்து இருக்கலாம். அப்படி அவர் செய்திருந்தால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்து யாருக்குமே தெரிந்திருக்காது. ஆனால், ஒரு படத்தை தன்னால் முடிந்த வரை புரமோட் செய்து தயாரிப்பாளருக்கு நல்லது செய்வது தான் ஒரு ஹீரோவின் கடமை என்பதை உணர்ந்து நடிகர் விஷால் வைரல் ஃபீவரிலும் புரமோஷனில் கலந்துக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கு திடீரென விஷாலின் தோற்றமே மாறியதும் அவரது கை நடுங்கியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடிப்பழக்கம் தான் காரணம் என்றும் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடிக்கும் போது விஷாலின் கண் தைக்கப்பட்டது தான் அவரது இந்த பிரச்சனைக்கு காரணம் என ஏகப்பட்ட பேச்சுக்கள் சோஷியல் மீடியாவிலும் யூடியூப் சேனல்களிலும் வலம் வர தொடங்கியது.

vishal madha gaja raja vishal health condition


நடிகர் விஷால் நைட் சரக்கு பாட்டிலுடன் தனது வீட்டின் கதவை தட்டினார் என பாடகி சுசித்ரா கிடைத்த கேப்பில் கெடா வெட்ட ஆரம்பித்தார். ஏகப்பட்ட நெகட்டிவிட்டிகள் விஷாலை சுற்றி வந்தாலும் அவர் பரிபூரணமாக குணமாகி பழைய விஷாலாகவும் புரட்சி தளபதியாகவும் வரவேண்டும் என நினைத்த சினிமா நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நேற்று நடைபெற்ற மத கஜ ராஜா ப்ரீமியர் ஷோவில் மைக்கை பிடித்து நடுங்காமல் பேசி நன்றி தெரிவித்தார் விஷால்.


பொங்கல் வின்னர் மத கஜ ராஜா: இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் கார் ரேஸ் படம் மட்டுமே டிவிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. விடாமுயற்சி படம் விலகிய நிலையில், பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் மற்றும் ஷங்கரின் கேம் சேஞ்சர் படங்கள் ஜனவரி 10ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஜனவரி 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விஷாலின் 12 ஆண்டு கால பழைய படமான மத கஜ ராஜா ரிலீஸ் ஆகிறது. நேற்று வெளியான ப்ரீமியர் காட்சியை பார்த்த அனைவருமே படத்தை பார்த்து வயிறு குலுங்க சிரித்தனர். மேலும், இந்த பொங்கல் வின்னர் மத கஜ ராஜா தான் என்றும் விஷாலுக்காக நிச்சயம் இந்த படத்தை ரசிகர்கள் வெற்றி பெற செய்வார்கள் என்றும் கூறி வருகின்றனர்.

மைக் ஆடல.. கை நடுங்கல: சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்ட ப்ரீமியர் நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் விஷால் ரொம்பவே தெளிவாகவும் எனர்ஜியாகவும் வந்து படத்தை பார்த்தார். மைக் பிடித்து பேசிய அவர், இப்போ இந்த மைக் ஆடல, என் கை நடுங்கல.. 3 மாசம், 6 மாசம் இவன் நடிக்கவே வரமாட்டான்னு சொன்னாங்க. ஆனால், நான் குணமாகி வரவேண்டும் என நினைத்த ரசிகர்களை சாகுற வரைக்கும் நான் மறக்கவே மாட்டேன் என ரொம்பவே உருக்கமாக விஷால் பேச படம் பார்க்க வந்த பலரும் கண்கலங்கினர். ஆனால், படம் ஆரம்பித்த பிறகு விஷால், சந்தானம், ஆர்யா காமெடி கலாட்டாவை பார்த்து வயிறு குலுங்க சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். விஷால் பேசும் போது அருகே இருந்து பார்த்த சுந்தர். சியும் கலங்கிவிட்டார். நடிகர் விஷால் பழையபடி மீண்டதை கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X