அயோக்கியா முடிஞ்சிருச்சு.. என் கோபம் முழுசும் இதில் தெரியும்.. விஷால் ஹேப்பி டிவீட்!

சென்னை: வெங்கட் மோகன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து முடித்து வெளியாக இருக்கும் படம் அயோக்கியா.

விஷால் நடித்த படங்களில் மிக அதிகமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் அதிரடி படமாம் அயோக்கியா.

Vishal expresses happiness over the wind up of Ayoghya movie shoot

கிட்டத்தட்ட 110 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.. இதனால் கூட பணம் விரயமாகிப் போனதாம். ஏன் இத்தனை நாட்கள் என்றால் விஷால் நடுவில் 29 நாட்கள் ஷூட்டிங் வரவே இல்லையாம்.

அவருக்கும் பல பஞ்சாயத்து நெருக்கடிகள், இதற்கிடையில் புது மாப்பிள்ளை வேறு..அதிலும் அவர் பிசியாக இருந்தார்னு படப்பிடிப்பு குழு சொல்கிறது.

இதை எல்லாம் விட ஒரு கொடுமை என்னன்னா படத்தை முடிக்கும்வரை சென்சார் சான்றிதழுக்கு விண்ணப்பிக்காமலே இருந்துள்ளனராம். ஒரு வழியாக படம் முடிந்து அவசர அவசரமாக சென்சாருக்கு அனுப்பி உள்ளார்களாம்.

குறிப்பிட்டபடி 10ம் தேதி படம் வெளியாகும் என்றாலும், இதன் தெலுங்கு பதிப்பு வெளியாகும் நாள் தள்ளிப்போகும் என்றும் சொல்கிறார்கள்.

ஏற்கனவே தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படத்தை எடுத்து ரீமேக் செய்ய இத்தனை நாட்களை படப்பிடிப்புக்கு எடுத்துக்கிட்டது என்பதில் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் வருத்தம்தானாம்.

இந்த நிலையில் நடிகர் விஷால் தமது ட்வீட்டர் வலைத்தளத்தில் அயோக்கியா படம் முழுவதுமாக முடிவடைந்தது குறித்து மகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.

அதில், அயோக்கியா படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. என்னோட கோபம் முழுக்க இந்த படத்தில் தெரியும் படியான இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநருக்கு நன்றி சொல்கிறேன்.

சமுதாயத்தில்நடந்த எல்லா இன்சிடென்ட்டுக்குமான படம் இது. இனிமே எவனாவது ஒரு பெண்ணை நாசம் பண்ணனும்னு நினைச்சா தூக்கு தண்டனைதான்னு பயப்படணும் என்றும் பதிவிட்டுள்ளார்.

மிகவும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் அயோக்கியா விஷாலுக்கு மீண்டும் நல்ல பெயரை பெற்றுத் தந்தால் நல்லது.புது மாப்பிள்ளை சந்தோஷமாக இருக்கட்டுமே ...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X