வாயைக் கொடுத்து வம்பை வாங்குவது இதுதானா? அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஆதரவாக விஷாலை ரவுண்டு கட்டும் பிரபலங்கள்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை மே 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் அமைச்சர் ராஜ் மோகனுக்கு பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, தகவல் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை போன்ற இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது, ராஜ் மோகன் சினிமா துறை குறித்து அனுபவம் இல்லாதவர், அப்படி இருக்கையில் அவரை சினிமாதுறைக்கு அமைச்சராக நியமித்ததை திரும்பப் பெற்றுக் கொண்டு, நீங்களே சினிமாதுறைக்கும் அமைச்சராக இருக்க வேண்டும் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கோரிக்கை வைத்தார்.

விஷாலின் இந்த கோரிக்கை தொடர்பான எக்ஸ் தள பதிவுக்கு விஷாலை திரைத்துறையைச் சேர்ந்த பலரும் காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக நடிகர் அருண் விஜய், " வேண்டுமானால் நீங்கள் தேர்தலில் நின்று, மக்கள் ஆதரவைப் பெற்று உங்கள் விருப்பப்படி அமைச்சரவை அமைத்துக் கொள்ளுங்கள். முதலமைச்சர் விஜய்யின் முடிவுகளில் தலையிடாதீர்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

Vishal Faces Backlash Over Comments on Minister Raj Mohan Arun Vijay and Celebrities React

அதேபோல், நடிகர் சாந்தனுவோ, " நீங்க படிச்ச ஸ்கூல்ல அவர் ஹெட்மாஸ்டர் அண்ணா" என்று பதிவிட்டுள்ளார். மேலும் தயாரிப்பாளர் சிவா தனது எக்ஸ் பக்கத்தில், " மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் மட்டுமல்ல, அந்த துறையில் நல்ல அனுபவமும் கொண்டவர். அவர் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும், சினிமா துறையில் பலருடன் நல்ல நட்பும் நெருக்கமும் கொண்டவர். தமிழ் சினிமா துறையின் பிரச்சனைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலைகளை நன்கு அறிந்தவராக இருப்பதால், அவரை தமிழ் திரைப்படத் துறை அமைச்சராக தேர்வு செய்திருப்பது மிகவும் சரியான முடிவாகும்.இந்த சிறந்த தேர்வை செய்த மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Vishal Faces Backlash Over Comments on Minister Raj Mohan Arun Vijay and Celebrities React

அதேபோல் வலைப்பேச்சு பிஸ்மி தனது எக்ஸ் பக்கத்தில், " விஷால் அவர்களின் கருத்து நியாயமற்றது. கடந்த கால திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பொறுப்பு வகித்தவர்களில் எத்தனை பேர் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள்? கடந்த திமுக ஆட்சியில் செய்தி விளம்பர துறை அமைச்சராக இருந்த திரு. மு. பெ. சாமிநாதன், அதிமுக ஆட்சிக் காலத்தில் அதே பதவி வகித்த திரு.கடம்பூர் ராஜூ உட்பட யாருமே திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் இல்லை. அந்த வகையில் கடந்த காலத்தோடு ஒப்பிட்டால் தற்போதைய செய்தி விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் மட்டுமே திரைப்படத் துறையோடு தொடர்பு உள்ளவர்.உண்மை இப்படி இருக்க, விஷால் அவர்கள் இப்படி ஒரு விஷமத்தனமான கருத்தை தெரிவிக்கலாமா? very wrong bro" என்று பதிவிட்டுள்ளார். விஷாலின் கருத்துக்கு திரைத்துறையில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X