நான் விஷாலோட மகன்.. மார்க் ஆண்டனி 2 பார்த்துட்டேன்.. டைம் டிராவல் பண்ணி வந்துருக்கேன்.. ஆஹான்!

சென்னை: மார்க் ஆண்டனி படத்தை பார்த்துட்டு இந்தளவுக்கா மண்டை குழம்பிப் போகும் என ரசிகர் ஒருவர் உலகமகா உருட்டு உருட்டிய வீடியோவால் டிரெண்டாகி உள்ளார்.

நடிகர் விஷாலுக்கு எதிர்காலத்தில் திருமணம் ஆகிவிட்டது என்றும் நான் தான் விஷாலோட மகன் என்றும் மார்க் ஆண்டனி 2 படத்தை பார்த்து விட்டேன் இப்போ நான் டைம் டிராவல் பண்ணி வந்து மார்க் ஆண்டனி படத்தை பார்த்துள்ளேன் என ரசிகர் ஒருவர் ரகளை செய்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Vishal fan claims he using time travel to watch Mark Antony makes everyone laugh

மார்க் ஆண்டனி செஞ்ச வேலை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தியேட்டரில் இருந்து வெளியே வரும் ரசிகர்களிடம் மார்க் ஆண்டனி திரைப்படம் எப்படி இருக்கிறது என்கிற கேள்வியை யூடியூபர்கள் மைக் நீட்டி கேட்டு வந்த நிலையில், இதுதான் சமயம் டிரெண்டாக என நினைத்த ரசிகர் ஒருவர் பேசிய பேச்சு ரசிகர்கள் மத்தியில் அவர் எதிர்பார்த்ததைப் போலவே தீயாக பரவி வருகிறது.

மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவன் தயாரிக்கும் டெலிபோனை வைத்து டைம் டிராவல் செய்ய முடியும் என்கிற கான்செப்ட் தான் இந்தப் படமே என்பதால், அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு மண்டை குழம்பி விட்டாரா இந்த ரசிகர் என நெட்டிசன்கள் கிண்டலடித்து அவரது வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Vishal fan claims he using time travel to watch Mark Antony makes everyone laugh

நான் விஷாலோட மகன்: உச்சகட்டமாக நடிகர் விஷாலுக்கு திருமணமாகிவிட்டது என்றும் நான் தான் விஷாலோட மகன் என்றும் மார்க் ஆண்டனி 2 படத்தை பார்த்து விட்டேன் இப்போ நான் டைம் டிராவல் பண்ணி வந்து மார்க் ஆண்டனி படத்தை பார்த்துள்ளேன் லியோ படத்தையும் பார்த்து விட்டேன் அதில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. லியோ திரைப்படம் எல்சியூ தான் என அந்த ரசிகர் மார்க் ஆண்டனி படத்தை மட்டுமின்றி லியோ படத்தையும் பார்த்து விட்டதாக உருட்டிய உருட்டு உலக மகா உருட்டு என ரசிகர்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.

புதிய படங்களை பார்த்து விட்டு ரசிகர்கள் அந்த படங்களில் வரும் கேரக்டர்கள் போலவே மாறிவிடுவதை பார்த்திருக்கிறோம். இவன் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா போயிட்டானே என ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் அந்த நபரை வைத்து அதிகம் ஷேர் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X