விஷால் திருமணம் ரத்து.. நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு தொழிலதிபருடன் கல்யாணம்? தீயாய் பரவும் தகவல்!
ஐதராபாத்: நடிகர் விஷாலுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிக்கும் படங்கள் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகி வருகிறது.
இவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் பதவி வகித்தார்.

இயக்கி நடிக்கிறார்
இப்போது சக்ரா என்ற படத்தை தயாரித்து நடித்துள்ள விஷால், அடுத்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் எனிமி படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் நண்பர் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை அவரே இயக்கி நடிக்க இருக்கிறார். மிஷ்கின் படத்தில் இருந்து விலகியதால், விஷால் இயக்குகிறார்.

அனிஷா ரெட்டி
இந்நிலையில், விஷாலும் ஐதராபாத்தைச் சேர்ந்த நடிகையான அனிஷா ரெட்டியும் காதலித்து வந்தனர். பின்னர் இரு வீட்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.

சங்கக் கட்டிடம்
திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அப்போது, தனது திருமணத்தை சென்னையில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில்தான் நடத்துவேன் என்றும் விஷால் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இவர்கள் திருமணம் ரத்தாகிவிட்டதாக செய்திகள் வெளியானது.

யாரும் தெரிவிக்கலை
ஆனால் அதில் உண்மை இல்லை என்று விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜி.கே. ரெட்டி தெரிவித்திருந்தார். இருந்தாலும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், விஷால் தரப்பிலோ, அனிஷா ரெட்டி தரப்பிலோ வெளிப்படையாக இதை யாரும் தெரிவிக்கவில்லை.

இளம் தொழிலதிபர்
இந்நிலையில், விஷாலுக்கு நிச்சயம் செய்யப்பட்ட நடிகை அனிஷா ரெட்டிக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பிரபல இளம் தொழிலதிபர் ஒருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாகவும் திருமணம் ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாகவும் டோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது.

விஷால் போட்டோ
இதனால் விஷால், அனிஷா ரெட்டி திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கிடையே, நடிகை அனிஷா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்தத்தின் போது நடிகர் விஷாலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளார்.

கருத்து வேறுபாடு
விஷால், அனிஷா திருமணம் எதற்காக ரத்து ஆனது என்பது பற்றி தகவல் தெரியவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள் என்றாலும் எதற்காக கருத்து வேறுபாடு என்ற விவரம் தெரியவில்லை. இந்தச் செய்தி தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











