விஷால் பிலிம் ஃபேக்டரி வெளியிட்ட பொது அறிவிப்பு.. அவருடன் தொடர்பு வைத்தால் நிர்வாகம் பொறுப்பல்ல!
சென்னை: விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் விஷால் பிலிம் பேக்டரி என்ற பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்நிறுவனத்தில் 45 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா மீது விஷாலின் மேனேஜர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து ஊழியர் ரம்யா மீது மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் கணக்காளர் ரம்யாவிடம் விஷால் பிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அந்நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், எங்கள் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த ரம்யா, நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பதை கண்டறியப்பட்டு 30.06.2020 அன்று காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7-07-2020 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

எனவே ரம்யா இனி எங்கள் நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியில் பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். விஷால் ஃபிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மீறி தொடர்பு வைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











