’அர்ஜுன் ரெட்டி’ பட நடிகையை மணக்கும் விஷால்... இணையத்தில் லீக்கான பர்சனல் போட்டோஸ்!
தெலுங்குப் பட நடிகை அனிஷா ரெட்டியுடன் விஷால் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video

சென்னை: விஷால் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக் கூறப்படும் தெலுங்கு நடிகை, 'அர்ஜூன் ரெட்டி' படத்தில் நடித்த அனிஷா ரெட்டி தான் எனத் தெரிய வந்துள்ளது. இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி, நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பல முக்கிய பொறுப்புகளில் இருப்பவர் நடிகர் விஷால். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்தவுடன் தான் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக முன்பே அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி, விரைவில் நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் முடிவடைய இருப்பதால் விஷாலின் திருமணப் பேச்சு பற்றிய செய்திகளும் கடந்த சில நாட்களாக அதிகளவில் உலா வருகின்றன.

விஷாலுக்கு திருமணம்:
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஷாலுக்கு ஆந்திரப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்க இருப்பதாக அவரது தந்தை தெரிவித்திருந்தார். அதன்படி, அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகளைத் திருமணம் செய்து கொள்வார் என செய்தி வெளியானது.

காதல் திருமணம்:
விஷாலும் இதனை உறுதி செய்வதைப் போல், ‘அனிஷா ரெட்டியைக் காதலிக்கிறேன்' எனப் பேட்டியளித்தார். இதனால் அவரது வருங்கால மனைவி இவர் தான் என ஊடகங்களில் ஒரு புகைப்படம் வைரலானது. ஆனால், அவர் மணப்பெண் இல்லை என விஷால் தரப்பு உடனடியாக விளக்கம் அளித்தது. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

வைரல் புகைப்படங்கள்:
இந்நிலையில், விஷாலின் காதலி தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டி தான் என தெரிய வந்துள்ளது. நேற்றிரவு முதல் விஷால், அனிஷா இணைந்து உள்ள புகைப்படங்கள் வெளியாகி விஷால்-அனிஷா திருமணத்தை உறுதி செய்துள்ளது.

யார் வெளியிட்டது?
இந்தப் புகைப்படங்களை யார் வெளியிட்டது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால், இவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது குறித்து விஷால் தரப்பும் மறுப்பு தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.

அர்ஜுன் ரெட்டி பட நடிகை:
நடிகை அனிஷா ரெட்டி, தெலுங்குப் பட நடிகை ஆவார். 2016ம் ஆண்டு நடிகையாக அறிமுகமான அவர், வெற்றிப்படமான அர்ஜுன் ரெட்டியில் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











