பொள்ளாச்சி பயங்கரத்தை வைத்து இப்படி படத்திற்கு விளம்பரம் தேடலாமா விஷால்?
சென்னை: பொள்ளாச்சி கொடூரத்தை வைத்து இப்படி சீப் பப்ளிசிட்டி தேடலாமா விஷால்?
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. அதில் ஒரு பெண் தன்னை விட்டுவிடுமாறு கதறிய வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவை பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது. இந்நிலையில் விஷால் செய்த காரியம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
விஷால்
விஷால் தற்போது அயோக்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அந்த படத்தில் அவர், 4 பேரை கொல்றதுக்கு 5 நிமிஷம் போதும். நடந்த கொடுமைக்கு அவங்கள தூக்கில் ஏத்தணும். அப்ப தான் இந்த மாதிரி வெறி பிடிச்சவனுங்க பொண்ணுங்கள தொடுவதற்கே பயப்படுவானுங்க என்று மிக மிக ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.
பி.ஆர்.ஓ.க்கள்
பொள்ளாச்சி சம்பவம் குறித்து விஷால் கடும் கோபத்தில் உள்ளார் என்று கூறி அவரின் பட வீடியோவை பி.ஆர்.ஓ.க்கள் ட்விட்டரில் வெளியிட்டனர். இதை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து விளாசியதும் அதை அவர்கள் நீக்கிவிட்டனர்.
நெகட்டிவ் விளம்பரம்
எந்த நேரத்தில் படத்திற்கு விளம்பரம் தேடுவது என்று இல்லையா என்று சீப் விளம்பரம் தேடிய விஷாலை பலரும் வறுத்தெடுத்துள்ளனர்.

மக்கள்
மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரத் துடிக்கும் விஷால் இப்படி பண்ணலாமா?. 200 பெண்களின் வாழ்க்கை நாசமாகியதை வைத்து படத்திற்கு விளம்பரம் தேடலாமா?


Click it and Unblock the Notifications











