என் கல்யாணத்தை பார்க்காம ஏன் போயிட்டீங்க.. மாரிமுத்து மறைவால் மன வேதனையில் ’மார்க் ஆண்டனி’ விஷால்
சென்னை: நடிகர் விஷாலின் திருமணத்தை பார்க்க வேண்டும் என மிகுந்த ஆவல் கொண்டிருந்த மாரிமுத்து மறைந்து விட்டார் என்கிற செய்தி பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்கும் போதே விஷாலுக்கு தெரிந்த நிலையில், மனமுடைந்து போய்விட்டார்.
நல்ல மனிதர் மாரிமுத்து என்றும் அவர் நடிக்கவே மாட்டாருங்க, அப்படியே ரியலா பிஹேவ் பண்ணுவார், கொரோனாவுக்கு அப்புறம் பல சினிமா பிரபலங்கள் இப்படி மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போறது என்ன டிசைன் என்றே தெரியவில்லை என உருக்கமாக பேசியுள்ளார் விஷால்.

மார்க் ஆண்டனி புரமோஷனில் பிஸி: டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்திற்காக தீவிர பிரமோஷனில் நடிகர் விஷால் ஈடுபட்டு வருகிறார். பல யூடியூப் சேனல்களுக்கும், மீடியாக்களுக்கும் நடிகர் விஷால் பேட்டி எழுத்து வரும் நிலையில், பிரபல யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்துவின் மறைவு செய்தி தெரிய வர அந்த இடத்திலேயே மனம் உடைந்து விட்டார் நடிகர் விஷால்.
மாரிமுத்து மறைவை அறிந்து மனவேதனை: மாரிமுத்துவை நீண்ட காலமாக தனக்கு தெரியும் என்றும் தன்னை வைத்து படம் இயக்கவும் அவர் முயற்சி செய்தார் என்றும் நடிகர் விஷால் அந்த பேட்டியில் கூறியுள்ளார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நடிகர் சேது திடீரென ஜாகிங் செய்து கொண்டிருந்தபோது சுருண்டு கீழே விழுந்து மரணித்தது எல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை.
தொடரும் துயரம்: நடிகர் விவேக், அண்ணன் மயில்சாமி, தற்போது மாரிமுத்து எனத் தொடர்ந்து பல நல்ல சினிமா கலைஞர்கள் இவ்வளவு சீக்கிரமாக உயிரிழப்பார்கள் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. நடிகர்கள், சினிமா கலைஞர்கள் மட்டுமின்றி 40 வயதைக் கடந்த பொதுமக்களும் சாதாரண பிளட் டெஸ்ட் மட்டுமின்றி ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஹார்ட் செக்கப்பயும் செய்து கொள்ள வேண்டும் என நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்யாணத்தை பத்தியே கேட்பாரு: மாரிமுத்து எப்போதுமே தன்னிடம் உரிமையாக பேசுவார் என்றும் திருமணம் எப்போது ஆகப் போகிறது. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க நான் பாக்கணும் சொல்லுவாரு, கட்டிட வேலைகளும் என்னாச்சு என கேட்பார். எல்லாத்தையும் நல்லா பண்றீங்க என பாராட்டுவார். ஆனால் அதற்குள் அப்படி ஒரு நல்ல மனிதர் இறப்பார் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவரது இழப்பால் வாடி வரும் குடும்பத்தினர் ஆறுதல் அடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என நடிகர் விஷால் அந்தப் பேட்டியின் போது பேசியுள்ளார்.
மார்க் ஆண்டனி ரிலீஸில் சிக்கல்: விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் வாரம் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்தப் படத்திற்கு எதிராக லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக லைக்கா நிறுவனர் தினம் நடிகர் விஷால் பேச்சுவார்த்தை நடத்தி வெளியிடுவாரா என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











