4 நாளில் நிச்சயதார்த்தம்: இந்நேரம் பார்த்து விஷாலுக்கு இப்படி ஆகிவிட்டதே!
Recommended Video

சென்னை: விஷாலுக்கும், அனிஷாவுக்கும் வரும் 16ம் தேதி ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடக்கிறது.
விஷாலும், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியும் காதலித்து வருகின்றனர். அவர்களின் காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள். இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக நிச்சயதார்த்த தேதி முடிவாகியுள்ளது.

நிச்சயதார்த்தம்
விஷால், அனிஷாவின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் வரும் 16ம் தேதி நடக்கிறது. அனிஷாவின் சொந்த ஊரில் நிச்சயதார்த்தம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால்
நிச்சயதார்த்தம் நடக்க உள்ள நிலையில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது அயோக்யா படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு பாடலுக்கு ஆடும்போது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது முழங்கையும் வீங்கியுள்ளதாம்.

டெம்பர்
ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான டெம்பர் தெலுங்கு படத்தின் ரீமேக் தான் அயோக்யா. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கன்னா நடிக்கிறார்.

விளம்பரம்
பொள்ளாச்சி பயங்கரம் குறித்து தமிழகமே பரபரக்கும் நிலையில் அயோக்யா படத்தில் வரும் ஒரு காட்சி வீடியோவை வெளியிட்டு மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் விஷால்.


Click it and Unblock the Notifications











