ஷுட்டிங்கில் காயமடைந்த விஷால்...அப்படி என்ன தான் நடந்துச்சு ?

ஐதராபாத் : எனிமி படத்தின் வேலைகளை முடித்து விட்டு, தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விஷால். எனிமி படம் விரைவில் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

தற்போது விஷால் துப்பறிவாளன் 2 மற்றும் விஷால் 31 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி, நடித்து வருகிறார். விஷால் முதல் முறையாக இயக்கும் படம் இது. அதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஷாலுக்கு முதுகில் காயம்

விஷாலுக்கு முதுகில் காயம்

அறிமுக இயக்குனர் து ப சரவணன் இயக்கும் விஷால் 31 படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் க்ளைமாக்ஸ் சீன் சண்டை காட்சியை படமாக்கும் போது விஷாலுக்கு முதுகில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி

க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி

விஷாலும், வில்லன் பாபுராஜும் க்ளைமாக்ஸில் சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஏற்கனவே ஏற்பட்டதை போல் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பிஸியோதெரபிஸ்ட் அழைத்து வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் ஓய்வு

இரண்டு நாட்கள் ஓய்வு

இதற்கு முன்பும் விஷால் 31 ஷுட்டங்கில் இதே போல் ரிஸ்கான சண்டை காட்சி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போது காயம் ஏற்படாமல் தப்பித்த விஷாலுக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக இரண்டு நாட்கள் ஓய்வில் இருக்க விஷாலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

வாழ்த்தும் ரசிகர்கள்

வாழ்த்தும் ரசிகர்கள்

விஷாலுக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருவதால் அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைந்து, வலிமையுடன் திரும்பி வர ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தாமதமாகுமா ஷுட்டிங்

தாமதமாகுமா ஷுட்டிங்

விஷால் 31 படத்தின் ஒட்டுமொத்த டீமும் தற்போது ஐதராபாத்தில் தான் முகாமிட்டுள்ளது. ஜுலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஓரிரு நாட்கள் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X