Vishal: பாய்ந்து போய் அஞ்சலியைக் கட்டிக்கொண்ட விஷால்.. ரொம்ப நேரமா விடல.. சக்சஸ் மீட்டில் ருசிகரம்!
சென்னை: நடிகர் விஷால் கடந்த வாரத்தில் இருந்து அதிகம் விவாதிக்கப்படும் நபர்களில் ஒருவராக உள்ளார். காரணம் 12 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆகவிருந்து, சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் போன, மத கஜ ராஜா படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸுக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் கலந்துகொண்டபோது, விஷால் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதற்கு காரணம், அவருக்கு மலேரியா காய்ச்சல் எனக் கூறப்பட்டது. பேசும்போது விஷாலின் கைகள் அதிகம் நடுங்கியது. இதைப் பார்த்த பலர், விஷால் போதைக்கு அடிமையாகிவிட்டார் என்றெல்லாம் கூறினார்கள்.

இப்படியான நிலையில் மத கஜ ராஜா படம் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆகி தியேட்டரில் சக்கை போடு போட்டு வருகின்றது. படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. படத்தில் விஷால் மற்றும் சந்தானத்தின் காமெடி நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளதால், ரசிகர்கள் சந்தானத்தை மீண்டும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மத கஜ ராஜா வசூல் ரீதியாக பெரும் வெற்றிப் படமாக மாறியதால், சக்சஸ் மீட் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட விஷால் அஞ்சலியைப் பார்த்ததும் பாய்ந்து போய் கட்டிப்பிடித்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

சுந்தர் சி, இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலஷ்மி சரத்குமார், அஞ்சலி, மனோபாலா, மணிவண்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் மத கஜ ராஜா. இந்தப் படம் கடந்த 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்து, சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் போனது. இதனால் இந்த ஆண்டு அதாவது 12 ஆண்டுகளுக்குப் பின் படம் வெளியானது. படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஷால் : இதனால் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். அப்போது பேசிய விஷால், பல சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பேசினார். அதிலும் குறிப்பாக, தனது உடல் நிலை சரியில்லாதபோது, அவருக்கு எதிராக மோசமாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். அப்போது நான் போதைக்கு அடிமையாகிவிட்டேன் என்றெல்லாம் கூறினார்கள். அவர்கள் அப்படி பேசியதன் மூலம், என்மீது மக்களுக்கு எந்த அளவுக்கு அன்பு உள்ளது என்பதைத் தெரிந்துக்கொண்டேன்.

கைநடுக்கம் : நிலநடுக்கம் குறித்த தகவல் என்றால், அது பெட்டிச் செய்தியாக வரும். ஆனால், விஷால் கைநடுக்கம் என்பது பெரிய கண்டண்ட்டாக மாறிவிட்டது. இனி என் கைகள் நடுங்காது. அதற்கு நான் விடமாட்டேன். ஆர்யா போன்ற நண்பன் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வரலஷ்மியை நினைத்து நான் சந்தோஷமாகவும் இருக்கின்றேன். அதேபோல் அவரது உழைப்பைப் பார்த்து கண்ணீர் சிந்துகின்றேன்" என பேசினார்.

அஞ்சலி: மேடையின் கீழே நடிகை அஞ்சலியைப் பார்த்ததும், விஷால் பாய்ந்து போய் கட்டிக் கொண்டார். அஞ்சலியும் விஷாலைப் பார்த்ததும் பாய்ந்து போய் கட்டிக் கொண்டார். இருவரும் வெகு நேரம் கட்டிபிடித்தபடியே பேசிக்கொண்டு இருந்தார்கள். ஒருவரை ஒருவர் நலம் விசாரித்த பின்னர், தொடர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தார்கள். குறிப்பாக விஷால், அஞ்சலியின் கண்ணத்தில் தனது கைகளை வைத்து பேசிக்கொண்டு இருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











