மெகா ஹிட்டான மதகஜராஜா.. விஷால் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் விஷால். அதற்கு பிறகு செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி என வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார். ஆனால் தொடர்ந்து அவரால் அந்த வெற்றியை தக்க வைக்க முடியவில்லை. இடையில் சில படங்கள் மட்டுமே அவருக்கு கை கொடுத்தன. கடைசியாக அவரது நடிப்பில் மதகஜராஜா வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. இந்தப் படம் 12 வருடங்களுக்கு முன்பு உருவானது குறிப்பிடத்தக்கது.

செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஷால் முதலில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்தவர். நடிகராக அறிமுகமான பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர்; நல்ல ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வருவார் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். அதன்படியே அவர் நடித்த தாமிரபரணி, சண்டைக்கோழி, திமிரு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அதில் விஷாலின் ஆக்‌ஷன் காட்சிகள் பலரையும் ரசிக்க வைத்தது. இதனால் பெரும் ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்டது.

vishal madhagajaraja sundar c

சறுக்கிய விஷால்: ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இடையில் அவருக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு ஹிட்டுக்காக ஏங்கிய விஷால் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் படம் பெரிதாக போகவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடித்துவந்த அவருக்கு எந்தப் படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. இதற்கிடையே நடிகர் சங்க விவகாரத்தில் சர்ச்சையும், சரத்குமாருடன் மோதலும் எழுந்தது அவருக்கு.

மார்க் ஆண்டனி மெகா ஹிட்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் மெகா ஹிட்டானது. முக்கியமாக நூறு கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்ததாக அவர் நடித்த ரத்னம் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. மேலும் அவர் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இந்த விவகாரத்தில்கூட அவருக்கும் இயக்குநர் மிஷ்கினுக்கும் பெரும் மோதல் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மதகஜராஜா: இதற்கிடையே சுந்தர்.சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பு மதகஜராஜா படத்தில் நடித்தார் விஷால். அதில் அவருடன் வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்தார்கள். முதன்முறையாக இரண்டு பேரும் இந்தப் படத்தில்தான் இணைந்தனர். படத்தின் ஷூட்டிங் எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்து முடிந்தாலும்; படமானது ரிலீஸாகாமல் இருந்தது. ஒருகட்டத்தில் மதகஜராஜா எப்படியும் ரிலீஸாகாது என்றுதான் கூறப்பட்டது.

மெகா ஹிட்: இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு படமானது ரிலீஸானது. பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்பதால் இது ஹிட் ஆகுமா என்று பலரும் யோசித்தனர். ஆனால் செம ட்விஸ்ட்டாக படம் மெகா ஹிட்டானது. இதுவரை 20 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்துக்காக விஷால் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X