'பூஜை'... விஷால்- ஹரி படத்தின் தலைப்பு இதுதான்!

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் இப்போது தயாராகிவரும் நான் சிகப்பு மனிதன் படத்துக்குப் பிறகு, உருவாகும் படம் புதிய படத்தை ஹரி இயக்குகிறார்.
இந்தப் படத்தில் விஷால் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாஸன் நடிக்கிறார்.
தாமிரபரணி படத்துக்குப் பிறகு ஹரியும் விஷாலும் இணையும் இரண்டாவது படம் இது.
பெரிய பட்ஜெட்டில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் பூஜையில் சத்யராஜ், ராதிகா, சூரி, ஜெயப்பிரகாஷ், மனோபாலா, சந்தானபாரதி, சார்லி, ஆர் சுந்தரராஜன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் மொத்தப் பாடல்களையும் நா முத்துக்குமார் எழுதுகிறார்.
இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Comments


Click it and Unblock the Notifications