twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடேங்கப்பா, இந்த பேட்டியை பார்த்தால் அரசியல்வாதிகள் எல்லாம் விஷாலிடம் டியூஷன் போகணும் போல...

    By Siva
    |

    Recommended Video

    எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை.. விஷால் அதிரடி!- வீடியோ

    சென்னை: சட்டத்திற்கு புறம்பாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார்.

    தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுமாறு இயக்குனர் சேரன் விஷாலிடம் தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையை முன் வைத்து தயாரிப்பாளர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

    மக்கள் பிரதிநிதி

    மக்கள் பிரதிநிதி

    அரசியல்வாதியாக அல்ல மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிடுகிறேன். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் போட்டியிட்டபோது இதே போன்று பிரச்சனை வந்தது. தற்போதும் பிரச்சனை வந்துள்ளது. நான் சட்டத்திற்கு புறம்பாக தேர்தலில் போட்டியிடவில்லை.

    தேர்தல்

    தேர்தல்

    நான் கட்சி துவங்க இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே போட்டியிடுகிறேன். அரசியல்வாதியாக அல்ல மக்களில் ஒருவனாக தேர்தலை சந்திக்க உள்ளேன்.

    மக்கள்

    மக்கள்

    ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டு அவற்றை நிறைவேற்றுவேன். மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பேன்.

    தயாரிப்பாளர் சங்கம்

    தயாரிப்பாளர் சங்கம்

    நல்லது செய்ய வேண்டும் என்று தான் நடிகர் சங்க தேர்தலில் நின்று ஜெயித்தோம். அதே நோக்கத்தில் தான் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு வென்றோம். தற்போதும் நல்லது செய்யும் நோக்கத்திலேயே இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார் விஷால்.

    English summary
    Actor Vishal said he is not contesting in RK Nagar bypoll against any laws. He is contesting because he wants to take good care of the people, he added.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X