விஷால் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி... ட்விட்டரில் விளக்கம்!

By Vignesh Selvaraj

Recommended Video

விஷால் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி...வீடியோ

சென்னை : நடிகர் விஷால் ஷூட்டிங்கின்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனும் தகவல் ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பு பரவியது.

நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனப் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஷால்.

விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், தன் உடல்நலம் ஆரோக்கியத்துடன் உள்ளதாக தனது நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான நடிகர் விஷால், அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 'அவன் இவன்' படத்தில் மாறுகண் கேரக்டரில் விஷால் நடித்ததால் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தார்.

தோளில் காயம்

தோளில் காயம்

சமீபத்தில் வெளியான 'துப்பறிவாளன்' திரைப்படத்தில் நடித்தபோது, விஷாலுக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் டெல்லியில் 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, விஷாலுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

உடனடியாக விஷால் டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின.

ட்விட்டரில் விளக்கம்

இந்நிலையில், விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் வெளியாகின. என் உடல்நலம் ஆரோக்கியத்துடன் உள்ளதை எனது நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்."

மார்ச் முதல் வாரம்

மார்ச் முதல் வாரம்

சில நாட்கள் தலைவலிக்காக ஓய்வு எடுக்கச் சென்றுள்ளதாகவும், ஓய்வுக்குப் பிறகு மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் திரும்புவேன் என்றும் பதிவிட்டுள்ளார் விஷால். விஷால் உடல்நிலையால் கவலைப்பட்ட ரசிகர்கள் இந்த ட்வீட்டால் ஆறுதல் அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X