என்னாது, தமிழ் ராக்கர்ஸில் விஷாலுக்கு பங்கு உள்ளதா?
சென்னை: தமிழ் ராக்கர்ஸில் விஷாலுக்கு பங்கு உள்ளதாக பிரபல தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் நடவடிக்கைகளை கண்டித்து சில தயாரிப்பாளர்கள் சென்னை தி. நகர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடங்களுக்கு நேற்று பூட்டு போட்டனர்.
இந்நிலையில் தி. நகரில் உள்ள கட்டிடத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து எதிரணியினர் போட்ட பூட்டு திறக்கப்பட்டுள்ளது.

சவால்
தயாரிப்பாளர் சங்க தலைவரானதும் ஆறே மாதத்தில் தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் தள்ளி கம்பி எண்ண வைப்பேன் என்று விஷால் சவால்விட்டார். சவால் இன்னும் சவாலாகவே உள்ளது. முன்பெல்லாம் படம் வெளியான அன்று லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ் தற்போது ரிலீஸுக்கு முன்பே வெளியிடத் துவங்கிவிட்டது.

அழகப்பன்
விஷால் பல கிரிமினல் குற்றங்களை செய்வதாக கேள்விப்படுகிறேன். மேலும் தமிழ் ராக்கர்ஸில் அவருக்கு பங்கு உள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது என்று பிரபல தயாரிப்பாளரான ஏ. எல். அழகப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து விஷால் தரப்பு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

அழகப்பன்
விஷால் பல கிரிமினல் குற்றங்களை செய்வதாக கேள்விப்படுகிறேன். மேலும் தமிழ் ராக்கர்ஸில் அவருக்கு பங்கு உள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது என்று பிரபல தயாரிப்பாளரான ஏ. எல். அழகப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து விஷால் தரப்பு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

தயாரிப்பாளர்கள்
விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சிலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் அளித்துள்ளனர். விஷாலுக்கு எதிராக உள்ள குழுவில் நடிகர் எஸ்.வி.சேகரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்படங்கள்
ஒரு படத்தை எடுத்து வெளியிட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் படாதபாடு படும்போது தமிழ் ராக்கர்ஸின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் தான் தமிழ் ராக்கர்ஸில் விஷாலுக்கு பங்கு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











