11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ட்விட்டரில் விஷால்: அந்த ப்ரொபைல் போட்டோவ பார்த்தீங்களா?
சென்னை: அரசியலில் குதித்த கையோடு விஷால் மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக நடிகர் விஷால் பேசியதாக தகவல் வெளியானது. இதையடுத்து மக்கள் அவருக்கு எதிராக திரும்பி திட்டித் தீர்த்தனர். நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் எதிர்க்கவில்லை என்று அவர் அளித்த விளக்கத்தை யாரும் ஏற்கவில்லை.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் ட்விட்டரில் இருந்து வெளியேறினார்.

ட்விட்டர்
விஷால் வரும் 21ம் தேதி நடக்கும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்துவிட்டார்.

செம போஸ்
மீண்டும் ட்விட்டருக்கு வந்துள்ள விஷால் கிட்ட வந்தால் குத்திப்புடுவேன் என்பது போல போஸ் கொடுத்திருக்கும் மாஸ் புகைப்படத்தை ப்ரொபைல் பிக்சராக வைத்துள்ளார்.
தொம்சம்
விஷாலின் ப்ரொபைல் பிக்சரை பார்த்த ஒருவர்,
அதாவது நடிகர் சங்க எலக்ஷன்ல நடந்த ப்ரச்சனைல அடி வாங்குனேன்.
ஆனா இந்த எலக்ஷன்ல எல்லா கட்சியையும் தொம்சம் பண்ண போறேன்னு சிம்பாலிக்கா சொல்றாப்ல😌 என கமெண்ட் போட்டுள்ளார்.
அரசியல்
வாரேன் வந்துட்டேனு சொன்னவங்க மத்தியில, தைரியமா களத்துல குதிச்ச பாத்தியா ரொம்ப சந்தோசம்யா... என ஒருவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பாஜக
அண்ணே படம் வேற அரசியல் வேற எப்போவும் வ்ளாட்டுத்தனமாவே இருக்குறது போல.ஆர்வம் இருக்கலாம் ஆர்வகோளாறு கூடாதுண்ணே..எது எப்படியோ BJPய விட அதிக ஓட்டு வாங்குனா சந்தோஷம்தான்


Click it and Unblock the Notifications











