மோதிரம் மாற்றியதும் எமோஷனல் ஆன விஷால், அனிஷா: வீடியோ இதோ
சென்னை: அனிஷாவுடன் திருமணம் நிச்சயமானதால் ஆசிர்வதிக்கப்பட்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் மோதிரம் மாற்றிய பிறகு இருவரும் எமோஷனல் ஆகிவிட்டனர்.
நடிகர் விஷாலுக்கும், நடிகை அனிஷா ரெட்டிக்கும் ஹைதராபாத்தில் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பெற்றோர், நண்பர்கள், நலம் விரும்பிகள் முன்னிலையில் அவர்கள் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
இந்நிலையில் அனிஷா தனக்கு கிடைத்தது ஆசிர்வாதம் என்கிறார் விஷால்.
விஷால்
அனிஷா கிடைத்ததில் மகிழ்ச்சியாகவும், ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன். லவ் யூ அனிஷா என்று ட்வீட் செய்துள்ளார் விஷால்.
ஃபீலிங்
நிச்சயதார்த்தத்தின்போது மோதிரங்களை மாற்றிய பிறகு அனிஷாவும், விஷாலும் எமோஷனல் ஆகிவிட்டனர். அதை அவரின் ரசிகர்கள் அழகான வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
வாழ்த்து
ஆர்யாவுக்கு திருமணமான கையோடு நண்பர் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட்
விஷால், அனிஷா திருமணம் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் சென்னையில் நடக்கும் என்று கூறப்படுகிறது. நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிவடைவதற்காக காத்திருக்கிறார் விஷால்.


Click it and Unblock the Notifications











