ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷாலை சந்தித்த லோகேஷ் கனகராஜ்.. தளபதி 67ல் இணைகிறாரா?
சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்கலாம் என்ற செய்திகள் வெளியான நிலையில், தற்போது அதுகுறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் - விஷால் கூட்டணி
விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நவம்பர் 5ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு உடனடியாக தளபதி 67-ல் நடிக்கவுள்ளார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் குறித்து அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஷாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

விஷாலை சந்தித்த லோகேஷ்
தளபதி 67 படத்தில் விஷால் நடிப்பது குறித்து அடுத்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதுகுறித்து சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது. விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். கேங்ஸ்டார் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. இந்நிலையில், மார்க் ஆண்டனி சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த விஷாலை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

உறுதியாகும் கூட்டணி
ஏற்கனவே 'தளபதி 67'ல் விஜய்க்கு வில்லனாக 6 பேர் நடிப்பதாக தகவல் வெளியானது. அதன்படி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் நிவின் பாலி, மன்சூர் அலிகான், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டன. இந்நிலையில், இப்போது விஷாலை லோகேஷ் சந்தித்துள்ளதால், அவரும் தளபதி 67ல் வில்லனாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்தக் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாஸ்டர், விக்ரம் படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இப்போது தளபதி 67ல் விஷால் வில்லனாக வாய்ப்பிருக்கிறது. இந்த அப்டே விஜய் - விஷால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் அப்டேட் வருமா?
தளபதி 67 அப்டேட் டிசம்பரில் தான் வரும் லோகேஷ் கனகராஜ் உறுதியாக கூறிவிட்டார். ஆனாலும் அடுத்தடுத்து வெளியாகும் தளபதி 67 அப்டேட்கள் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளன. இன்னொருபக்கம் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாகவும், அதற்காக அவருக்கு நயன்தாராவை விட அதிகம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி திரிஷாவுக்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படலாம் என தெரிகிறது. இருந்தாலும் ரசிகர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வமான அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











