»   »  யாரும் எனக்காக கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை: நயன் பற்றி விஷால்

யாரும் எனக்காக கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை: நயன் பற்றி விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Vishal is not romancing Nayanthara

இது தவிர இரும்புத்திரை, சண்டைக்கோழி 2 ஆகிய படங்களிலும் விஷால் நடிக்கிறார். இந்நிலையில் விஷால் சாக்ரடீஸின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்ற முடிவில் இருக்கும் நயன்தாரா விஷாலுடன் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று விஷால் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா தனக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்று விஷால் கூறியுள்ளார். முன்னதாக விஷாலும், நயன்தாராவும் சத்யம் படத்தில் சேர்ந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vishal said that Nayanthara is not acting with him in a movie to be directed by Socrates.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil