ஒரு வருங்கால 'ச.ம.உ.'வே இப்படி செய்யலாமா விஷால்?
சென்னை: துருக்கியில் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் விஷால் வாக்களிக்கவில்லை.
லோக்சபா தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அதுவும் யோசித்து செய்ய வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் வலியுறுத்தியுள்ளனர். ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி என பல திரையுலக பிரபலங்கள் வாக்களித்துவிட்டனர்.

அரசியலில் குதிக்கத் துடிக்கும் விஷால் சுந்தர் சி. படப்பிடிப்புக்காக துருக்கியில் உள்ளார். அதனால் அவரால் வாக்களிக்க வர முடியவில்லையாம். ஒரு வருங்கால சட்டமன்ற உறுப்பினரே இப்படி செய்யலாமா என்று சமூக வலைதளங்களில் விஷாலிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வாக்களிக்க அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளார். ஆனால் நம்ம விஷாலுக்கு வர நேரம் இல்லையோ என்று விமர்சிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடும்போது வாக்கு சேகரிக்கச் சென்றால் ஓட்டு போடாமல் ஷூட்டிங்கில் இருந்தவர் தானே நீங்க, இப்போ எங்களை மட்டும் ஓட்டு போட சொல்கிறீர்களா என்று கேட்க மாட்டார்களா. என்ன விஷால் இப்படி பண்றீங்களே.


Click it and Unblock the Notifications











