»   »  விஷாலும் எத்தனை நாள் தான் நல்லவராவே இருப்பது?

விஷாலும் எத்தனை நாள் தான் நல்லவராவே இருப்பது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மோகன்லாலின் வில்லன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விஷால்.

கோலிவுட்டில் ஹீரோவாக கலக்கி வரும் விஷால் மலையாள திரையுலகில் வில்லனாக அறிமுகமாகிறார். பி. உன்னிகிருஷ்ணன் மோகன்லாலை வைத்து இயக்கி வரும் படம் வில்லன்.

இந்த படத்தில் தான் விஷால் வில்லனாக நடிக்கிறார்.

விஷால்

விஷால்

வில்லன் படப்பிடிப்பில் விஷால் கலந்து கொண்டு வருகிறார். வில்லனில் விஷாலின் லுக் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வசதியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் உன்னிகிருஷ்ணன்.

நடிப்பு

நடிப்பு

வில்லன் படத்தில் விஷாலின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்குமாம். படத்திற்காக தாடி வைத்து, கண்ணாடி போட்டு புதிய கெட்டப்பில் சீரியஸாக உள்ளார் விஷால்.

ஹன்சிகா

ஹன்சிகா

வில்லன் படம் மூலம் ஹன்சிகாவும் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார். அவர் ஹீரோயின் கிடையாது. சிறு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர்

வில்லன் படத்தில் மோகன்லாலின் மனைவியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வருகிறார்.

English summary
Vishal has finally joined the sets of the upcoming Mohanlal movie, Villain. B Unnikrishnan, the director of the project revealed Vishal's first look from the movie through his official Facebook page, recently.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil