Vishal: “பிரச்சினையே அவன் தான்..” கார்த்தியுடன் சேர்ந்து விஷாலை கலாய்த்த ஆர்யா.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கார்த்தி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், ஜப்பான் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கார்த்தியுடன் விஷால், ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் ஒன்றாக மேடையேறினர். அப்போது விஷால் தான் பிரச்சினையே என கார்த்தியும் ஆர்யாவும் கலாய்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

விஷால் தான் பிரச்சினையே
கார்த்தி நடிப்பில் ராஜூ முருகன் இயக்கியுள்ள திரைப்படம் ஜப்பான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. கார்த்தியுடன் அனு இம்மானுவேல், சுனில், பவா செல்லத்துரை, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த தீபாவளிக்கு கார்த்தியின் ஜப்பான், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெய்டு ஆகிய படங்கள் மட்டுமே வெளியாகின்றன. இவைகளில் ஜப்பான் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் ஜப்பான் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியுள்ளது. இன்னொரு பக்கம் ஜப்பான் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளும் களைக்கட்டத் தொடங்கியுள்ளன.
இதனிடையே ஜப்பான் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கார்த்தி பங்கேற்றார். கார்த்தியுடன் அவரது நெருங்கிய நண்பர்களான விஷால், ஆர்யா, ஜெயம் ரவி மூவரும் ஒன்றாக மேடையேறினர். நான்கு பேருமே தங்களது நட்பு குறித்து ஜாலியாக ஒருவரையொருவர் கலாய்த்துக்கொண்டனர். அப்போது விஷால் சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்த கார்த்தி, “இவனுக்கு இருக்குற பிரச்சினைக்கு எப்படித்தான் இப்படி சிரிச்சிட்டே இருக்கான்னு தெரியல..” என கலாய்த்தார்.
அப்போது கார்த்தியுடன் சேர்ந்துகொண்டு விஷாலுக்கு தரமான பஞ்ச் கொடுத்தார் ஆர்யா. அதாவது 'பிரச்சினையே அவன் தான்’ என விஷாலை கலாய்க்க, அங்கிருந்த மொத்த கூட்டமும் சிரிப்பலையில் அதிர்ந்தது. விஷால், ஆர்யா இருவரும் இணைந்து அவன் இவன், எனிமி ஆகிய படங்களில் நடித்துள்ளனர். அதேபோல், நடிகர் சங்கத் தேர்தலிலும் விஷால், கார்த்தி தலைமையில் மெகா கூட்டணி அமைந்தது.
இக்கூட்டணியில் உருவாகும் நடிகர் சங்கக் கட்டடத்தில் தான் எனக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் நடக்கும் என விஷால் கூறியிருந்தார். ஆனால், விஷாலுக்காக காத்திருக்காத ஆர்யா, நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது. விஷால் மட்டும் இப்போது வரை முரட்டு சிங்கிளாகவே வலம் வரும் நிலையில், அவர் தான் பிரச்சினை என கார்த்தியும் ஆர்யாவும் கலாய்த்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











