வைரல் ஃபீவர் விஷால்.. விசாரித்த குஷ்பூ.. கட்டியணைத்து முத்த மழை பொழிஞ்சிட்டாரே

சென்னை: விஷால்தான் கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக இருக்கிறார். மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொள்ள வந்த அவர் கைகள் நடுங்கியபடி பேசியதை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே என்று உச் கொட்டினார்கள். பலரும் அவரது உடல்நிலை பற்றிய வதந்திகளை கிளப்பிவிட்டார்கள். ஆனால் அவருக்கு எதுவும் வைரல் காய்ச்சல்தான் என்று அவரது மருத்துவர் நேற்று தெளிவுப்படுத்தியிருந்தார்.

சினிமா குடும்பத்திலிருந்து வந்தாலும் தன்னுடைய திறமையால் தனக்கென தனியிடத்தை பிடித்திருப்பவர் விஷால். அவர் நடித்த செல்லமே, தாமிரபரணி, சண்டக்கோழி, திமிரு உள்ளிட்ட படங்கள் எல்லாம் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. அந்தப் படங்கள் அவரை பக்காவாக ஆக்‌ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தின. முக்கியமாக ஒரு ஹீரோ அறிமுகமான சிறிது காலத்திலேயே ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி மின்னியது என்றால் அது விஷால் மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vishal

லைம் லைட்டில்: தொடர்ந்து முன்னணி ஹீரோவாக வலம் வந்துகொண்டிருந்த விஷாலுக்கு இடையில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் தோல்வி படங்களை கொடுத்தாலும் லைம் லைட்டிலேயேதான் இருந்தார். ஏனெனில் தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவைகளில் முக்கிய பொறுப்புக்கு வந்தார். அதேபோல் தனது மனதில் பட்டதை பட்டென பேசுவதும், ஏழைகளுக்கு தொடர்ந்து உதவி செய்யும் வீடியோக்கள் வெளியாவதும் என விஷால் மக்களின் கவனத்திலிருந்து மறையவே இல்லை.

மார்க் ஆண்டனி மெகா ஹிட்: ஆனால் சினிமாவில் மட்டும் அவர் எதிர்பார்த்த வெற்றி வரவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டாகி கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. விஷாலின் கரியரில் அந்தப் படம்தான் முதன்முறையாக நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக நடித்த ரத்னம் திரைப்படமும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.

மதகஜராஜா: சூழல் இப்படி இருக்க சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து 13 வருடங்கள் ரிலீஸாகாமல் இருந்த மதகஜராஜா திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஷால் கைகள் நடுங்க பேசினார். அதனைப் பார்த்த பலரும் விஷால் குடிக்கு அடிமையாகிவிட்டார்; அவரது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுவிட்டது; அதனால்தான் இப்படி ஆகிவிட்டார் என்று இஷ்டத்துக்கும் அடித்துவிட்டார்கள்.

vishal

முத்த மழை: ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை விஷாலுக்கு வைரல் ஃபீவர்தான் என்று அவரது மருத்துவர் கூறினார். இந்நிலையில் மதகஜராஜா ப்ரோமோஷனில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது பத்திரிகையாளர் ஒருவரிடம் விஷால் பேசிக்கொண்டிருக்கும்போது நடிகையும், சுந்தர்.சியின் மனைவியுமான குஷ்பூ விஷாலை பின்னிருந்து தொடுகிறார். உடனே திரும்பிய விஷால் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியோடு குஷ்பூவை கட்டியணைத்து தலையில் சில நொடிகள் வாஞ்சையோடு முத்தமிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு பேருக்குள்ளும் எவ்வளவு பாசம் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X