இடியட்.. நிச்சயம் நரக வேதனை அனுபவிப்ப.. நடிகை குறித்து அவதூறு பேச்சு.. பொங்கி எழுந்த விஷால்!

சென்னை: நடிகர்கள் பற்றியும் நடிகைகள் பற்றியும் படுமோசமாக ஏவி ராஜு பேசிய நிலையில், அதற்கு நடிகை திரிஷா தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. உடனடியாக திரிஷாவை சொல்லவில்லை என்றும் திரிஷா மாதிரி பெண் வேண்டும் என்றே கேட்டார் என ஏ.வி. ராஜு விளக்கம் அளித்துள்ளார். மேலும், தான் பேசியது நடிகை திரிஷாவின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

சினிமா பிரபலங்களான சேரன், குஷ்பு, மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக இந்த விவகாரத்தில் குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், நடிகர் விஷால் பதிவிட்டுள்ள ட்வீட்டில் யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை என்றும் இந்த விவகாரத்தில் மனிதத்தன்மையே இல்லாமல் முட்டாள்தனமாக நடந்துக் கொண்ட அந்த இடியட் நிச்சயம் பூமியில் இருக்குறதே பாவம் என்றும் அவன் வீட்டுலையும் பெண்கள் எல்லாம் இருக்காங்கள என நறுக்கென கேட்டுள்ளார்.

Vishal lends his supports to Trisha and condemns that politician

ஸ்டுப்பிட் இடியட்: அரசியல்வாதி என்கிற பெயரில் உள்ள ஒரு அறிவுக்கெட்ட முட்டாள் பேசியதை இப்போது தான் பார்த்தேன். என்னவொரு மூடத்தனம். நடிகர்கள் என்றால் என்னவெல்லாம் பேசலாமா? கொஞ்சமாவது பொறுப்புணர்வு இல்லாமல் அரசியலில் என்ன பண்ணிட்டு இருக்க, உன்னுடைய பெயரையோ பாதிக்கப்பட்ட நபரின் பெயரையோ குறிப்பிடப் போவதில்லை. அதை நான் செய்து உனக்கு மேலும், பப்ளிசிட்டி ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால், நீ செஞ்சிருக்க காரியம் எவ்வளவு மோசமானது என்று உனக்குப் புரிய வரும். அதற்கான பின் விளைவுகளை நிச்சயம் நீ அனுபவிப்பாய் என நடிகர் விஷால் எக்ஸ் தளத்தில் தனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

நரகத்துல போட்டு வாட்டுவாங்க: உனக்கு இங்கே நான் எந்தவொரு கண்டனமும் தெரிவிக்கப் போவதில்லை. கண்டிப்பா உனக்கு நரக வேதனை உன்னோட பேச்சுக்காக கிடைக்கும். இதை நான் ஒரு நடிகர் சங்க உறுப்பினராக எல்லாம் சொல்லவில்லை. ஒரு மனிதனாக சக நடிகருக்கு ஏற்பட்ட வலியை உணர்ந்து வேதனைப்படும் மனிதனாக பதிவிடுகிறேன் என நடிகர் விஷால் ட்விட்டர் பக்கத்தில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

Vishal lends his supports to Trisha and condemns that politician

சேரன் கோரிக்கை: நடிகை குறித்து மோசமான வகையில் பேசிய நபரை நடிகர் சங்கம் சும்மா விடக்கூடாது என்றும் விஷால் மற்றும் கார்த்தியை டேக் செய்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேரன் கோரிக்கை வைத்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிந்த விஷால் இப்படியொரு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X