»   »  அந்த ஹீரோயின் கூடவா, நீ செத்தடா: கார்த்தியை கலாய்த்த விஷால்

அந்த ஹீரோயின் கூடவா, நீ செத்தடா: கார்த்தியை கலாய்த்த விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கருப்பு ராஜா வெள்ளை ராஜா பட செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால் கார்த்தியை கிண்டல் செய்தார்.

பிரபுதேவா இயக்கத்தில் நண்பர்களான விஷால், கார்த்தி சேர்ந்து நடிக்கும் படம் கருப்பு ராஜா வெள்ளை ராஜா. இந்த படத்தில் பாலிவுட் நடிகை சயீஷா ஷாகல் நடிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் கலந்து கொண்ட விஷால் பேசுகையில்,

பதவிகள்

பதவிகள்

முன்பெல்லாம் நடிகர் விஷாலை மேடைக்கு அழைக்கிறோம் என்பார்கள். தற்போது பதவிகளை சொல்லும்போது பயமாக இருக்கிறது. பதவிகளை எல்லாம் சொல்லி உன் பெயரை கூப்பிட்டால் வயசானவன் மாதிரி இருக்கும் என்று கார்த்தி சொன்னான்.

பயம்

பயம்

பதவிகளை சொல்லி கூப்பிடும் போது எல்லாம் பயமாக இருக்கிறது. வெடி படத்திற்கு பிறகு நானும் பிரபுதேவா மாஸ்டரும் மீண்டும் சேர்ந்து பணியாற்றுகிறோம்.

பிரபுதேவா

பிரபுதேவா

பிரபுதேவா மாஸ்டருடன் பணியாற்றுவது அருமையான அனுபவம். இரண்டு ஹீரோக்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் கொடுத்துள்ள படம் இது. இது போன்ற படம் வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

சுபாஷ்

சுபாஷ்

இந்த படத்தின் கதையை தந்த சுபாஷ் சார் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு நன்றி. அவரது இறுதி நாட்களில் டயாலிசிஸ் செய்தபோது கூட இப்படி ஒரு அருமையான கதையை தந்துள்ளார்.

கார்த்தி

கார்த்தி

சயீஷா வனமகன் படப்பிடிப்பில் டான்ஸ் ஆடியபோது நானும் கார்த்தியும் பார்த்தோம். பிரபுதேவாவின் ஆவி அவருக்குள் புகுந்தது போன்று ஆடினார். கார்த்தி, நீ செத்த. கார்த்தியும், சயீஷாவும் சேர்ந்து ஆடும் பாடல் உள்ளது.

சயீஷா

சயீஷா

சயீஷா மாதிரி ஒரு பொண்ணு ஆடி நான் பார்த்து இல்லை. சிம்ரன் ஆடியுள்ளார். அதன் பிறகு வேறு யாரும் அப்படி ஆடிப் பார்க்கவில்லை. வனமகன் படத்தை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்.

ரூ. 10 கோடி

ரூ. 10 கோடி

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நானும், கார்த்தியும் ரூ. 10 கோடி தருகிறோம். இந்த படம் மற்றும் எதிர்காலத்தில் நடிக்கும் படங்களில் இருந்து கிடைக்கும் பணத்தை கட்டிடம் கட்ட கொடுப்போம் என்றார் விஷால்.

English summary
Vishal has attended the press meet of Karuppu Raja Vellai Raja and made fun of good friend Karthi's dancing skill.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil