twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிரைவர் மரணத்திற்கு விஷால் தான் காரணமா..? மேனேஜர் விளக்கம்!

    விஷால் மேனேஜர் ஓட்டுனர் மரணம் குறித்து விளக்கமளித்துள்ளார்

    |

    சென்னை: நடிகர் விஷாலின் ஓட்டுனர் உயிரிழந்தது தொடர்பாக விஷால் மேனேஜர் விளக்கமளித்துள்ளார்.

    விஷாலிடம் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்த பாண்டியராஜன் என்பவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதுகுறித்து பேட்டியளித்த பாண்டியராஜனின் தந்தை, விஷால் நினைத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் எனக் கூறியிருந்தார்.

    Vishal manager about driver death!

    இதுகுறித்து பேட்டியளித்துள்ள பாண்டியராஜனின் சகோதரர் முருகேசன், ஐந்து வருடங்களுக்கு முன் ஆபீஸ் பாயாக விஷாலிடம் சேர்ந்த பாண்டியராஜன், மூன்று ஆண்டுகள் கழித்து விஷாலின் பர்சனல் டிரைவராக மாற்றம் செய்யப்பட்டான். இரண்டு வருடங்களாக பர்சனல் டிரைவராக இருந்த பாண்டியராஜன் விஷாலைப் பற்றி தவறாக பேசியதாக பொய்க் குற்றம் சாட்டப்பட்டு வேலையை விட்டு நீக்கப்பட்டான்.

    பாண்டியராஜனுக்கு மருத்துவ உதவிகள் செய்துள்ளோம் என விஷால் தரப்பு சொல்வது பொய். ரூ. 20 ஆயிரம் மட்டுமே அனுப்பினர். மேலும், அவர் குடித்ததாக சொல்வதும் பொய். விஷாலைப் பற்றி தவறாக பேசியதாக பொய்ப் புகார் கூறியவரும், பிறகு மன்னிப்பு கேட்டுவிட்டார். விஷாலின் மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயலாளராக இருக்கும் ஹரிகிருஷ்ணன் தான் பாண்டியராஜனுக்கு துரோகம் இழைத்துவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது விஷால் அலுவலகத்திலிருந்து யாரும் கண்டுகொள்ளாததால் விஷாலை சந்திப்பதற்கும், போனில் பேசுவதற்கும் முயற்சி செய்தோம். அப்போது பாபு என்பவர் விஷாலிடம் சொல்வதாகக் கூறி போனைக் கட் செய்துவிட்டார். அதன்பிறகு அவர் சொன்னாரா இல்லையா எனத் தெரியாது. ஆனால் விஷாலைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக பதிலளித்துள்ள விஷாலின் மேனேஜர் ஹரிகிருஷ்ணன், ஓட்டுனர் வேலையை விட்டு நின்று பத்து மாதங்கள் ஆகிறது. யாராவது சம்பள பாக்கியை பத்து மாதங்கள் கழித்து கொடுப்பார்களா? 6 மாதத்திற்கு முன்பு சீரியஸாக இருந்தபோது, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்தோம். வேலையை விட்டு நின்றபிறகும் மனிதாபிமானத்தோடு உதவியிருக்கோம்.

    சிகிச்சைக்குப் பிறகு அவர் மூன்று மாதத்தில் உயிரிழக்க குடிப்பழக்கம் தான் காரணம். தெரியாதவர்களுக்கே உதவி செய்கிறோம், எங்களிடம் வேலைபார்த்தவரை எப்படி பார்க்காமல் விடுவோம் எனக் கேட்கிறார். அந்த குடும்பம் சோகத்தில் இருக்கும் நேரத்தில் நாங்களாக எதையும் நிரூபித்து அதன்மூலம் நல்ல பெயர் சம்பாதிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

    English summary
    Vishal manager opened about driver Pandiyarajan death.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X