விஷாலுடன் திருமணமா? இணையத்தில் தீயாய் பரவும் வதந்தி..விளக்கம் கொடுத்த நடிகை!

சென்னை : நடிகர் விஷாலுக்கும், பிரபல நடிகைக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சோஷியல் மீடியாவில் ஒரு செய்தி காட்டுத்தீபோல பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்த படங்களும் திரையரங்கில் சரியாக ஓடவில்லை.

இதனால், அடுத்து ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் லத்தி படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

லத்தி விரைவில் ரிலீஸ்

லத்தி விரைவில் ரிலீஸ்

வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரித்து உள்ளனர் என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டபோதிலும் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அபிநயாவுடன் திருமணமா?

அபிநயாவுடன் திருமணமா?

நடிகர் விஷால் லத்தி படத்தைத் தொடர்ந்து மார்க் ஆண்டனி என்கிற படத்தில் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். இத்தனை நாள் முரட்டு சிங்கிளாக இருந்த விஷாலுக்கு, மார்க் ஆண்டனி படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை அபிநயாவுடன் திருமணம் நடந்து விட்டதாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டன.

எல்லாமே வதந்தி..சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

எல்லாமே வதந்தி..சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள அபிநயா, மார்க் ஆண்டனி படத்தில் நானும் விஷாலும் கணவன், மனைவியாக நடித்து வருகிறேன். அந்த புகைப்படங்கள் தான் சோஷியல் வெளியாகி சர்ச்சையாகி விட்டது. நிஜமாகவே எங்களுக்கு திருமணமாகி விட்டது போன்ற வதந்திகளை கிளப்பி விட்டார்கள் இது உண்மை இல்லை என்று விளக்கம் கொடுத்தார். இதனையடுத்து விஷால் அபிநயா திருமணம் வதந்தி உறுதியாகி உள்ளது.

இருவரும் பிரிந்தனர்

இருவரும் பிரிந்தனர்

நடிகர் விஷாலுக்கு 2019-ஆம் ஆண்டு, ஆந்திராவைச் சேர்ந்த நடிகை அனிஷா அல்லா ரெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் சில தனிப்பட்ட காரணங்களால் உறவை முறித்துக் கொண்டனர். சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை விஷால் காதலித்து வந்த நிலையில், திடீரென இருவரும் பிரிந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X