விஜய்யை சந்தித்த விஷால்.. மார்க் ஆண்டனி டீசரை போட்டுக் காட்டி செம ஹேப்பி.. டிரெண்டாகும் பிக்ஸ்!

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசரை நடிகர் விஜய் சற்று முன் ஆஃப் லைனில் வெளியிட்டுள்ளார்.

அந்த டீசரை முதன் முறையாக விஜய்க்கு போட்டுக் காட்டி சந்தோஷப்பட்ட தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் விஷால் தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

Vishal meet Vijay and shows his Mark Antony teaser

#ThalapathyVijayforMarkAntony ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து அந்த புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் விஷால் சந்திப்பு: நடிகர் விஜய்க்கும் சினிமாவில் ஏகப்பட்ட நடிகர்களே தீவிர ரசிகர்களாக உள்ளனர். அதில் ஒருவர் தான் விஷால். இந்நிலையில், தனது மார்க் ஆண்டனி படத்தின் டீசரை நடிகர் விஜய்யை வைத்து வெளியிட முடிவு செய்த அவர் அவரை சந்திக்க அனுமதி கேட்டதும், அதுக்கென்னப்பா பண்ணிட்டா போச்சு என உடனடியாக ஓகே சொன்ன நிலையில், விஜய் - விஷால் சந்திப்பு இன்று அமோகமாக நடந்துள்ளது.

Vishal meet Vijay and shows his Mark Antony teaser

மார்க் ஆண்டனி டீசரை கண்டு ரசித்த விஜய்: த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார்.

எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ள நிலையில், அந்த டீசரை ஆஃப் லைனில் நடிகர் விஜய்யை வைத்தே ரிலீஸ் செய்துள்ளார் விஷால்.

Vishal meet Vijay and shows his Mark Antony teaser

டீசரை ரிலீஸ் செய்த நடிகர் விஜய் அந்த டீசரை கண்டு ரசிக்கும் புகைப்படங்களையும் நடிகர் விஷால் தற்போது ஷேர் செய்துள்ளார்.

டிரெண்டாகும் புகைப்படங்கள்: விஷால் படத்தில் விஜய் நடிக்கிறாரா என புயல் கிளம்பிய நிலையில், விஷால் படத்தின் டீசரைத்தான் விஜய் வெளியிடுகிறார் என்கிற விளக்கம் வெளியான நிலையில், உடனடியாக விஜய் உடனான சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்ட விஷால் என்னுடைய ஹீரோ, என்னுடை பிரதர் நடிகர் விஜய்க்கு ரொம்ப நன்றி என நன்றி தெரிவித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது தீயாக டிரெண்டாகி வருகின்றன.

Vishal meet Vijay and shows his Mark Antony teaser

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X