twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷால் பட பிரச்சனை.. தாமதமாக ரிலீஸான ஸ்ருதி ஹாசன் படம்.. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஹீரோ!

    By
    |

    சென்னை: விஷால் நடித்த படத்தின் பிரச்சனை காரணமாக, ஸ்ருதிஹாசன் நடித்த படத்தின் ரிலீஸ் தாமதமானது.

    நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கில் நடித்துள்ள படம், க்ராக். இதில் ரவிதேஜா ஹீரோவாக நடித்துள்ளார்.

    பிறந்த நாளும் அதுவுமா.. கால் டாக்ஸி டிரைவராகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. 3 மொழிகளில் பிரம்மாண்டம்! பிறந்த நாளும் அதுவுமா.. கால் டாக்ஸி டிரைவராகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. 3 மொழிகளில் பிரம்மாண்டம்!

    வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி, ரவிசங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை கோபிசந்த் மலினேனி இயக்கி உள்ளார்.

    மே மாதம் ரிலீஸ்

    மே மாதம் ரிலீஸ்

    இவர் இதற்கு முன் ரவிதேஜா நடிப்பில் டான் சீனு, பலுப்பு ஆகிய படங்களை இயக்கியவர். தாகூர் மது தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் மே மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா காரணமாக தள்ளிப் போனது.

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    இந்நிலையில், நேற்று (ஜனவரி 9) ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவலுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் முதல் பெரிய ஹீரோ படமாக இது இருந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

    ரிலீஸ் ஆகவில்லை

    ரிலீஸ் ஆகவில்லை

    ஆனால், திட்டமிட்டபடி நேற்று காலை படம் ரிலீஸ் ஆகவில்லை. தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ள பண நெருக்கடி காரணமாக காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் நேற்று மாலை படம் ரிலீஸ் ஆனது. இதற்கான காரணம் என்ன என்று விசாரித்தபோது விஷால் நடித்த படம்தான் காரணம் எனக் கூறப்பட்டது.

    டெம்பர் ரீமேக்

    டெம்பர் ரீமேக்

    விஷால், ராஷி கண்ணா நடித்து, கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம், அயோக்யா. இது தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக். இதை தயாரித்தவர் தாகூர் மது. இந்த படம் கடைசி நேரத்தில் பைனான்ஸ் சிக்கலில் நின்றது. இதற்காக ஸ்கிரீன் சீன் நிறுவனத்திடம் ரூ.5 கோடி கடன் பெற்று படத்தை ரிலீஸ் செய்தார்.

    நீதிமன்றம் தடை

    நீதிமன்றம் தடை

    அந்தப் பணத்தை அவர் திருப்பித் தராததால், ஸ்கிரீன் சீன் நிறுவனம் 'க்ராக்' படத்துக்குத் தடை கேட்டு நீதிமன்றம் சென்றது. தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, அந்த உத்தரவை க்யூப் நிறுவனத்துக்கு ஸ்கிரீன் சீன் அனுப்பி வைத்ததால் படம் ரிலீஸ் ஆகவில்லை. பின்னர் பிரச்சனை பேசி முடிக்கப்பட்டு ரிலீஸ் ஆகியுள்ளது.

    ரசிகர்களுக்கு நன்றி

    ரசிகர்களுக்கு நன்றி

    இதுபற்றி ட்விட்டரில் கூறியுள்ள ரவிதேஜா, அனைத்து பிரச்சனைகளும் முடிக்கப்பட்டு படம் ரிலீஸ் ஆகிறது. அமைதி காத்த ரசிகர்களுக்கு நன்றி.இந்தப் படம் மிரட்டலாக இருக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.இதற்கிடையே இந்தப் படம் ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியாகி இருப்பது,படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

    English summary
    The morning shows of Ravi Teja and Shruti Haasan’s telugu film KRACK delayed yesterday, due to financial hindrance between the producer and financiers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X