தெருநாயை ஹீரோவாக வைத்து படமெடுக்கும் விஷால்! விஷாலின் புதிய அவதாரம் இயக்குனர்!

Recommended Video

தெருநாயை வைத்து படமெடுக்கும் விஷால்! புதிய இயக்குனர் அவதாரம் !- வீடியோ

சென்னை: விஷால் இயக்கும் படத்தில் தெருநாய் தான் ஹீரோ என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் பொதுவாக செல்ல பிராணிகள் மீது அதீத அன்பு கொண்டவர். கேரளாவில் தெருநாய்களை கொல்லும் முயற்சியை அரசு மேற்கொண்டபோது அதை எதிர்த்து போராட்டத்தில் குதித்தார்.

தற்போது தெருநாய்களை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படம் பற்றி கூறிய விஷால், இயக்குனராக வேண்டுமென்ற எண்ணம் எப்பொதுமே மனதில் ஓடிக்கொண்டே இருப்பதாகவும், இப்படத்தின் கதை கடந்த மூன்று வருடங்களாக மனதில் இருப்பதாகவும் கூறினார்.

Vishal movie hero is street dog!

நான் என்னுடைய இயக்குனர் நண்பர்களுக்கு இந்த கதையை சொன்னேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. இப்படத்தின் முதற்கட்ட வேலையை ஜனவரியில் துவங்க உள்ளேன். இப்படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் நான் இன்னும் யாரையும் முடிவு செய்யவில்லை. இப்படத்தின் ஹீரோ ஒரு தெருநாய் தான். ஆனால் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளது.

இப்படத்தில் நிறைய விலங்குகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். அதானால் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருக்கும் என சொல்லும் விஷால், 2016 ஆம் ஆண்டு வர்தா புயலில் பாதிக்கப்பட்ட தெருநாய் ஒன்றை மீட்டு வளர்த்து வருகிறார். இது ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என சொல்லும் விஷால் மனித வாழ்க்கையில் தெருநாய்களின் முக்கியத்துவத்தை பேசும் படமாகவும் இருக்கும் என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X