»   »  விஷால் - முத்தையா கூட்டணியின் மருது... பூஜையுடன் தொடங்கியது!

விஷால் - முத்தையா கூட்டணியின் மருது... பூஜையுடன் தொடங்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷால் - கொம்பன் முத்தையா கூட்டணியின் புதிய படமான மருது பூஜை மற்றும் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

விஷால் தற்போது ‘கதகளி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். படத்தை பொங்கலுக்கு வெளியிடும் நோக்கில் பரபரப்பாக வேலைப் பார்த்து வருகின்றனர்.


Vishal - Muthaiya's new movie launched

இந்நிலையில், விஷாலின் அடுத்த படமான 'மருது' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. 'கொம்பன்' இயக்குனர் முத்தையா இயக்கும் இந்த படத்தின் கதை கிராமத்து பின்னணியை கொண்ட ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறது.


இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். ஆர்.கே. சுரேஷ் களஞ்சியம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.


Vishal - Muthaiya's new movie launched

முக்கிய வேடத்தில் ராதாரவி நடிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார்.

English summary
Vishal has joined with director Muthaiya for the first time for an untitled movie and the pooja of the same happened yesterday in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil