விஷால்- மடோனாவின் 'கத்திச்சண்டை'
சென்னை: சுராஜ் இயக்கத்தில் விஷால்- மடோனா இணைந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
'பிரேமம்' படத்தின் மூலம் மலையாள- தமிழ் ரசிகர்களின் மனங்கவர்ந்த மடோனாவிற்கு, விஜய் சேதுபதியுடன் நடித்த 'காதலும் கடந்து போகும்' படம்
நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் விஷாலுடன், மடோனா இணைந்து நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மருது படத்திற்குப் பின் விஷால் தற்போது மிஷ்கினின் 'துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்படத்திற்கு 'கத்திச்சண்டை' என்று தலைப்பு வைத்திருப்பதாகவும், விஷாலுடன் இணைந்து மடோனா செபாஸ்டின் இப்படத்தில் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் 'ரோமியோ ஜூலியட்' நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ளதாக கூறுகின்றனர்.
இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக சுராஜ் இயக்கத்தில் வெளியான 'மாப்பிள்ளை', 'அலெக்ஸ்பாண்டியன்', 'சகலகலாவல்லன்' 3 படங்களுமே வரிசையாக தோல்வியைத் தழுவின.
இதனால் ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு இயக்குநர் சுராஜ் தள்ளப்பட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











