எம்ஜிஆர் பிறந்தநாளைக் கொண்டாடிய சண்டகோழி!
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 101வது பிறந்த நாளை சண்டகோழி 2 படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடினார் நடிகர் விஷால் மற்றும் குழுவினர்.
புரட்சி தலைவர், பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களது 101-வது பிறந்த நாள் விழா நாடெங்கும் மக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி சண்டைகோழி-2 படப்பிடிப்பில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் எம்ஜிஆர் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடந்து இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண் மற்றும் படக்குழவினர் கலந்துக்கொண்டு எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
முன்னதாக நடிகர் சங்கம் சார்பில் திநகரில் எம்ஜிஆர் படத்துக்கு இயக்குநர் மனோபாலா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
Comments


Click it and Unblock the Notifications